மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! மூவர் படுகாயம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம்(25.07.2026) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் விபத்து
அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களில் பிரவீன் எனும் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மற்ற மூவர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை திருகோணமலையிலிருந்து உருவாக்க வேண்டும் - இம்ரான் எம்.பி