அநுர அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சாவகச்சேரி மக்கள் - களத்தில் தமிழ் தலைவர்கள்
புதிய இணைப்பு
மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அநுர அரசாங்கத்திற்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் இன்று (12.09.2026) சாவகச்சேரியில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்தக் கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு, தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
அத்துடன், அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பதாதைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியா வழங்கிய 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.
தேர்தல் காலத்தில் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எல்லளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித கரிசனையும் காட்டாது இழுத்தடிக்கின்றனர் அது மாத்திரமின்றி, திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல் துறை சார்ந்த விடயங்ளை முன்னெடுத்து வருகின்றனர் உள்ளிட்ட பல விடயங்களை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்னர்.








மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் நீடிப்பு : கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள்