எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை திருகோணமலையிலிருந்து உருவாக்க வேண்டும் - இம்ரான் எம்.பி
எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து உருவாக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையின் அடுத்த கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கும் புதிய அத்தியாயமாக உள்ளதாக நேற்று (25.07.2026) கிண்ணியாவில் இடம்பெற்ற கடினப் பந்து போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் கடினப்பந்து கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்தி, திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை உயர்மட்ட போட்டிகளுக்கு தயார்படுத்துவதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.
உயரிய இலக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயணம்
எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து உருவாக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் இந்தப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு கிரிக்கெட் தொடர் மட்டுமல்ல திருகோணமலை மாவட்ட விளையாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு புதிய பயணமாகும்.
இந்த சிறப்புமிக்க நிகழ்வை மிக நேர்த்தியாகவும், வெற்றிகரமாகவும் ஏற்பாடு செய்த கிண்ணியா பிரீமியர் லீக் (KPL) ஏற்பாட்டுக் குழுவினருக்கும், இதற்கு பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.





1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri