அனோஜன் விவகாரத்தில் மோடியின் தலையீடு.. அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரத்திற்குத் தீர்வு காண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மோடியின் நெருங்கிய நண்பர்
தனது 'X' தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வரும் மோடி, இலங்கையின் உயரிய சிவில் விருதான ஸ்ரீலங்கா ரத்னாவை ஏற்றுக்கொண்டவர் என்பதோடு இலங்கையின் நீண்டகால நண்பராகவும் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "உங்கள் நண்பரும் ஸ்ரீலங்கா ரத்னா விருது பெற்றவருமான பிரதமர் நரேந்திர மோடியின் அவசரக் கவனத்திற்கு அனோஜன் சிவராசாவின் இக்கட்டான நிலையை கொண்டு வருமாறு நான் வலியுறுத்துகிறேன்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் ஒரு தீர்வைப் பெறுவதற்காக, இளவரசர் சல்மானிடம் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டுப் பேசுமாறு ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
<Appeal to President> I urge President @anuradisanayake to bring #Anojan_Sivarasa’s desperate plight to the urgent attention of your friend, recipient of "SriLanka Rathna" Prime Minister Narendra Modi.
— Mano Ganesan (@ManoGanesan) September 19, 2026
Given PM Modi’s close ties with Saudi Prime Minister and Crown Prince… pic.twitter.com/4wFbn1RoZh