செப்டம்பர் 24 இல் கதி கலங்கப்போகும் கொழும்பு : 159 எம்பிக்களையும் மிரட்டும் சஜித்
செப்டெம்பர் 24 ஆம் திகதி பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த பேரணியைப்பார்த்து 159 எம்பிக்களும் கதிகலங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக்கட்சி ஆட்சியைக் கொண்டுவந்து, நாட்டின் அதிகாரத்தை பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.
மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது.
இதற்கு எதிராகப் பெரும் மக்கள் பலத்தைத் திரட்டுவோம் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்களுடன் மேலும் பல விடயங்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி.....
வெளிநாடொன்றில் 7 வருடங்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட பெண் - 20000 டொலரை வெகுமதியாக அறிவித்த பொலிஸார்