யாழ்ப்பாணம்- கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ: மக்கள் தொடர் போராட்டம்
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்று மாலை 6 மணி முதல் தீப்பற்றி எரிந்து வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
தீ பரவி நீண்ட நேரமாகியும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர்.
குப்பை மேட்டிலிருந்து எழும் அடர்ந்த புகையின் காரணமாக, அந்த வீதியால் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
போராட்டம்
இதன் காரணமாக, மாநகர சபைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா யெசீதன், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்று தான் செயற்படப் போவதாக உறுதியளித்தார்.
மேலும், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை நேரில் பார்வையிட்டனர்.