நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!
சம்மாந்துறைப் பகுதியில் நீண்ட காலமாகப் பொலிஸாரைத் தப்பித்து ஏமாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர் பெருந்தொகையான 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் நேற்று (18) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரே, அல் முனீர் வீதியில் வைத்து அவர் பயணித்த வானுடன் பொலிஸாரினால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பணத்தொகையும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.