ஒரு வார்த்தைக்காக ஒரு உயிரைப் பறிக்காதீர்கள்..! அனோஜனுக்காக சவுதியிடம் சஜித் உருக்கமான கோரிக்கை
சவுதி அரேபியாவில் இலங்கை புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு கருணை காட்டுமாறு சவுதி அரேபிய அதிகாரிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளமான எக்ஸில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மரண தண்டனை
ஒரு வார்த்தைக்காக ஒருவரின் உயிரைப் பறிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, அனோஜனுக்கு கருணை வழங்குவதற்கான வாய்ப்பை சவுதி அதிகாரிகள் திறந்துவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு மதத்தை, அவமதிப்பாகக் கருதப்படும் ஒரு வார்த்தையால் அழிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
A man’s life should not be taken for a word.
— Sajith Premadasa (@sajithpremadasa) September 19, 2026
If the reported death sentence against Sri Lankan migrant worker Anojan Sivarasa is confirmed, I hope Saudi Arabia will show the mercy that lies at the heart of every great faith.
A religion that has endured for centuries cannot be… https://t.co/LPsXdzyED0
ஒரு வார்த்தைக்கு பதிலாக ஒருவரின் உயிரைப் பறிப்பதிலேயே ஒரு மதத்தின் வலிமை தங்கியிருக்கக் கூடாது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒவ்வொரு சிறந்த மதத்தின் அடிப்படையிலும் காணப்படும் கருணையை சவுதி அரேபியா வெளிப்படுத்தும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்