நானுஓயாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழப்பு
நானுஓயாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (19.09.2026) காலை இடம்பெற்றுள்ளது.
லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி கைது
தொழில் நிமித்தம் இன்று காலை நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் 42 வயதான வான் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.