அதிகாலை இடம்பெற்ற கொடூரம்! தாயை காப்பாற்ற போராடிய மகன் - பலியான சகோதரன்
அங்குருவடோட்ட - பெத்திகமுவ பகுதியில் இன்று அதிகாலை (19) நடந்த கூர்மையான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஹல்தோட்ட பகுதியை சேர்ந்த 37 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், போதைக்கு அடிமையானவர் என்றும், வீட்டில் அடிக்கடி சண்டைகளை ஏற்படுத்துபவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
நேற்று இரவு (18) உயிரிழந்தவர் தனது தாயை தாக்கியபோது, தாயை காப்பாற்றும் முயற்சியில் அவரது 35 வயது தம்பி அரிவாளால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரால் தாக்கப்பட்ட தாய், காயங்களுடன் ஹொரன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இதற்கு முன்னர் தனது தந்தையை தாக்கி காயப்படுத்தியதாகவும், தந்தையும் ஹொரன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக 35 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.