இணையவழி வணிகம் மூலம் பெருந்தொகை பணமோசடி! இரண்டு வருடங்களின் பின்னர் சிக்கிய நபர்
பெருந்தொகை இணையவழி பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையவழி பணமோசடி சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கம்பஹா, படுவத்த பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், ஒரு டெலிகிராம் குழுவின் மூலம் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுளளது.
இணையவழி பணமோசடி
மேலும், இணையவழி வணிகம் மூலம் பணம் சம்பாதித்துத்தருவதாக வாக்குறுதியளித்து, அவர் பெற்ற 542,877 ரூபாவிலிருந்து 66,999 ரூபாவை மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

இணையவழி பணமோசடி சம்பவம் தொடர்பாக 2024.02.10 அன்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றப்புலனாய்வுப்பிரிவின் வடமேற்கு மாகாணப்பிரிவு இந்த விசாரணையை தொடங்கியுள்ளது.
அதன்படி, படுவத்த பகுதியை சேர்ந்த 38 வயதான சந்தேகநபர் நேற்று (18) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் அவசரமாக நாடு திரும்பும் ஷிரந்தி ராஜபக்ச! அறுவை சிகிச்சையிலும் சிக்கல்