அனோஜனை மீட்க தீவிர முயற்சி - விஜித ஹேரத்துடன் கந்தசாமி பிரபு அவசர சந்திப்பு
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும் அனோஜன் எனும் இளைஞரின் விடுதலை தொடர்பில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் உடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார்.
மேற்படி பதிவில்,
இலங்கை இளைஞர் அனோஜனின் விடுதலை தொடர்பில் விஜித ஹேரத் உடன், மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் அவசர சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டேன்.
இதன்போது இலங்கையின் ஒட்டு மொத்த மக்கள் சார்பிலும் அனோஜன் விடுவிக்கப்பட வேண்டும் என விடுக்கப்படும் கோரிக்கை தொடர்பிலும் அவரது குடும்பத்தால் விடுக்கப்படும் கருணை அடிப்படையிலான தனிப்பட்ட விடுவிப்பு கோரிக்கை தொடர்பிலும், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வெளி விவகார அமைச்சர் இவ்விவகாரத்தில் நேரடி தலையீட்டை மேற்கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டேன்.

அதிகாரபூர்வமான அறிவிப்பு கிடைக்கப்பெறவில்லை..
இது தொடர்பில் அமைச்சர் அனோஜன் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்குத் தேவையான சட்ட முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் இலங்கை அரசாங்கத்தால் தூதரகம் ஊடாக சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டு, அனோஜன் குடும்பத்தினரின் கோரிக்கைக்கு ஏற்ப அவசியமான அனைத்துவிதமான உதவிகளையும் வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வரும்.
அதே வேளை, இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத போதிலும், வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இதுவரை மரண தண்டனை அல்லது தீர்ப்பு சம்பந்தமான எந்தவொரு அதிகாரப்பூர்வ பிரதியும், அது தொடர்பான அறிக்கைகளும் வெளிவிவகார அமைச்சிற்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் தற்போதைய நிலவரப்படி, இலங்கை மக்களினதும் அரசினதும் சார்பில் சவுதி அரேபியா அரசிடம் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்த்து அதற்கேற்ற முறையான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு தீவிரமாக முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார். உண்மையில் தான் நேரடி கவனம் செலுத்தி வருவதாகவும் என்னிடம் உறுதி கூறினார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பாக அனோஜன் குடும்ப உறுப்பினர்களை அமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து பேசும் வேண்டுகோளையும் முன் வைத்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடொன்றில் 7 வருடங்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட பெண் - 20000 டொலரை வெகுமதியாக அறிவித்த பொலிஸார்