சவூதியில் அனோஜனிற்கு இறுதி நிமிடங்களில் நடந்த மறைக்கப்பட்ட உண்மைகள்..!
சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவுக்காக அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றும், மாறாக 5 வருட சிறைத்தண்டனையும் 3,000 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
இவ்வாறு இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உண்மை என்ன என்பது தொடர்பில் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அனோஜன் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரி முகநூலில் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை என்ன? அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? இந்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களுடன், செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி ஆராய்கின்றது.