இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள்! நிர்மலா சீதாராமனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Sri Lanka Refugees Tamils Smt Nirmala Sitharaman Ilaiyathambi Srinath
By Rusath Nov 03, 2026 08:06 AM GMT
Report

இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களுக்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்குத் திரும்ப விரும்பாத அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமனுடனும் கலந்துரையாடல்

மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்தில் திங்கட்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த வாரம் தமிழ்நாடு மற்றும் புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அங்கு பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள்! நிர்மலா சீதாராமனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை | Sri Lankan Tamil Refugees Living India Return Home

டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு மற்றும் காஷ்மீரில் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பான ஒப்பீட்டு ஆய்வு மாநாட்டில் பிரதான பேச்சாளராகக் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, தமிழக அரசின் சமூகநலத்துறை அமைச்சர் வன்னியரசு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்ததுடன், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனும் கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும், தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என இந்தியத் தரப்பிடம் எடுத்துரைத்ததாக சிறிநாத் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்கள்

காணிப் பிரச்சினைகள், தொல்பொருள் திணைக்களத்தின் தலையீடுகளால் ஆலயங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், அரசியல் தீர்வு முயற்சிகளில் நிலவும் தாமதம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, திருகோணமலையில் உள்ள சிவன் ஆலயம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்ததாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள்! நிர்மலா சீதாராமனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை | Sri Lankan Tamil Refugees Living India Return Home

மேலும், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னேற்றங்கள் இல்லாத நிலை குறித்தும் இந்திய நிதியமைச்சரிடம் எடுத்துரைத்ததாகக் கூறினார்.

தாம் முன்வைத்த விடயங்களை இந்திய நிதியமைச்சர் கவனத்துடன் கேட்டறிந்ததாகவும், அவற்றை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதுடன், ஆலயங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கருத்துகளைத் தெரிவிப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் உறுதி

அத்துடன், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் நிர்மலா சீதாராமன் உறுதியளித்ததாக சிறிநாத் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள அல்லது அனுமதிக்காகக் காத்திருக்கும் அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த இந்தியாவின் உதவியையும் கோரியதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள்! நிர்மலா சீதாராமனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை | Sri Lankan Tamil Refugees Living India Return Home

அதேபோன்று, வடக்கு - கிழக்கில் உட்கட்டமைப்பு வசதிகள், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான இந்தியாவின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பிலும் இந்தியத் தரப்பிடம் எடுத்துரைத்ததாகத் தெரிவித்த அவர், இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் இராஜதந்திர ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நிதி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நிதி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

பிரதி சபாநாயகரின் முடிவால் வெடித்த சர்ச்சை! நாடாளுமன்றத்தில் பரபரப்பு

பிரதி சபாநாயகரின் முடிவால் வெடித்த சர்ச்சை! நாடாளுமன்றத்தில் பரபரப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US