ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நிதி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான தேசிய லொத்தர் சபையின் நிதி முறைகேடு வழக்கு, எதிர்வரும் பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் விசேட திட்டமொன்றுக்காக நியமிக்கப்பட்ட மூன்று ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை தேசிய லொத்தர் சபை நிதியிலிருந்து செலுத்தி அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
2015 ஜனவரி 12 முதல் 2017 மே 22 வரையான காலப்பகுதியில் இந்த முறைகேடு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) பிரதிநிதிகள் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதனையடுத்து, ஆணைக்குழுவுக்கு அறிவித்தல் அனுப்புமாறு கொழும்பு மேலதிக நீதவான் லியன்வர்ஷா விதான உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் முதலாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவி ஷியாமிலா பெரேரா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரவி கருணாநாயக்கவுக்கும் கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது.