பாடசாலை மாணவர்களுடன் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து: நால்வர் வைத்தியசாலையில்..
ஆரம்ப பாடசாலை மாணவர்கள் குழுவை ஏற்றிச் சென்ற ஒரு முச்சக்கர வண்டி வாகனம் 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(04.11.2026) ஹட்டன் - புலியாவத்த பிரதான வீதியில் உள்ள பி.டபிள்யூ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு பாடசாலை மாணவர்கள் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
புலியாவத்த பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை முடித்து வந்த நான்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனது முச்சக்கர வண்டி எதிர் திசையிலிருந்து அதிவேகமாக வந்த ஒரு முச்சக்கர வாகனத்திக்கு இடமளிக்க முயன்றபோது, தனது வாகனம் கவிழ்ந்து செங்குத்தான பள்ளத்தில் விழுந்ததாக சாரதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விபத்து தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், புலியாவத்த தமிழ் ஆரம்ப பாடசாலை ஒன்றில் 3 முதல் 4 ஆம் வகுப்புகளில் பயிலும் மூன்று மாணவிகளும் ஒரு மாணவனும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
