அநுர அரசின் புதிய சட்டமூலம் அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்! முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா எச்சரிக்கை
அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' நாட்டையோ அல்லது மக்களையோ பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை அடக்குவதற்கே வழிவகுக்கும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா சாடியுள்ளார்.
கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று (03.11.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலை
சர்வதேச அளவில் 'பயங்கரவாதம்' என்பதற்குத் தெளிவான மற்றும் முறையான வரைவிலக்கணம் இதுவரை வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அரசு கொண்டுவந்துள்ள 83 பக்கங்களைக் கொண்ட இந்தச் சட்டமூலத்தில் அனைத்து விடயங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
சட்டத்தின் உறுப்புரைகளில் 'ஏதேனும்' என்ற சொல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதன் மூலம், அரசுக்கு எதிராக முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருப்பவர்களைப் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாக வரைவிலக்கணப்படுத்த மறைமுக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார்.

எந்தவொரு அமைப்பையும் தடை செய்யும் சட்டம்
இந்த சட்டமூலம் பிரஜைகளின் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனத்தின் 19ஆவது உறுப்புரையை முற்றிலும் மீறும் வகையில் அமைந்துள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், தெளிவான வரையறைகளின்றி ஜனாதிபதி விரும்பும் எந்தவொரு அமைப்பையும் தடை செய்வதற்கு இந்தச் சட்டம் வழிவகுக்கும் என்றும், இவ்வாறான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் நாட்டின் நிலைமை முற்றுமுழுதாக அராஜக நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பொங்கல் ரேஸில் களமிறங்கிய விஜே சித்துவின் 'டயங்கரம்' திரைப்படம்.. வெளியானது Fun Loaded டீசர் Cineulagam