இரண்டு சேவைகளுக்கான TIN கட்டாய விதிமுறையில் தற்காலிக தளர்வு! அரசாங்கம் அறிவிப்பு
இலங்கையில் TIN (வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்) பெறாதவர்களுக்கு வங்கி கணக்குகளை திறக்கவும், வாகன வருமான உரிமத்தை புதுப்பிக்கவும் தற்காலிக சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனை அறிவித்துள்ளார்.
TIN பெற வேண்டிய கட்டாயத்தை நீக்கவில்லை
TIN சான்றிதழ் இல்லாவிட்டாலும், தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் மற்றும் தனிப்பட்ட விபரங்களைச் சமர்ப்பித்து புதிய வங்கிக் கணக்கைத் திறக்கலாம் TIN இல்லாமலும், NIC விபரங்களை வழங்கி பிரதேச செயலகங்களில் வாகன வருமான உரிமத்தைப் புதுப்பிக்கலாம்.

இந்த தற்காலிக தளர்வு TIN பெற வேண்டிய கட்டாயத்தை நீக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1.7 கோடி பேரில், 1.3 கோடி பேருக்கு ஏற்கனவே TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் பதற்றமடையத் தேவையில்லை
மேலும் சுமார் 40 இலட்சம் பேர் TIN பெற வேண்டியுள்ளது. அத்துடன், TIN இலக்கம் பெற்றிருப்பதால் ஒருவர் தானாகவே வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
TIN பதிவு செய்வதில் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை எனவும், இணையதள மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 73 நிமிடத்தில் பயணம்; புல்லட் ரயிலுக்கு அரசு ஒப்புதல் News Lankasri