6.3 பில்லியன் டொலர் கிரிப்டோ கொள்ளை - ஹேக்கர்களின் அதிர்ச்சி திட்டம் அம்பலம்
உலகின் மிகப்பெரிய கிரிப்டோ நாணயப் பரிவர்த்தனை நிறுவனமான பைனான்ஸில் (Binance), போலி வேலைவாய்ப்பு நேர்காணல் மற்றும் AI கருவியைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் 6.3 பில்லியன் டொலர் பெறுமதியான கிரிப்டோ நாணயங்களைத் திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைனான்ஸ் நிறுவனத்தின் பொறியியலாளர் ஒருவரை உண்மையான வேலைவாய்ப்புத் தளம் ஊடாகத் தொடர்புகொண்ட ஹேக்கர்கள், நிறுவனப் பிரதிநிதிகள் போன்று நடித்து அவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறியுள்ளனர்.
இரண்டாவது நேர்காணலின்போது, வேலைக்கான பணிப்புரை எனக் கூறி தீங்கிழைக்கும் மென்பொருள் அடங்கிய கோப்பொன்றைப் பதிவிறக்கச் செய்துள்ளனர்.
பணம் மீளப்பெறுதல் நடவடிக்கை இடைநிறுத்தம்
இதன் மூலம் பொறியியலாளரின் கணினியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஹேக்கர்கள், நிறுவனத்தின் மற்றைய இரு பொறியியலாளர்களின் மடிக்கணினிகளையும் அணுகி, பெருமளவிலான கிரிப்டோ நாணயங்களைப் பரிமாற்றம் செய்யும் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவியுள்ளனர்.

இதனையடுத்து, உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளர்களின் பணம் மீளப்பெறுதலை பைனான்ஸ் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுடன் வடகொரிய ஹேக்கர்களுக்குத் தொடர்புள்ளதாக அமெரிக்க விசாரணையாளர்கள் தெரிவித்துள்ள போதிலும், வடகொரியா அதனை மறுத்துள்ளது.
திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்கவும், பாதுகாப்புக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஐரோப்பிய விமான நிலையங்களில் தீவிர சோதனை News Lankasri