உடன் கடுகதி தேர்தல் முறைமை என்பது வெறும் சாதாரண விடயம் மாத்திரமே...! :அருண் ஹேமச்சந்திரா கருத்து (Video)

Trincomalee Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lanka Economic Crisis Gota Go Home 2022
By Badurdeen Siyana Jun 23, 2022 06:49 PM GMT
Report

“உலகளாவிய ரீதியில் உள்ள உடன் கடுகதி தேர்தல் என்ற முறைமை மூலம் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பது என்பது வெறும் சாதாரண விடயம் மாத்திரமே" என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் திருகோணமலை அனுராதபுர சந்தியில் தீப்பந்த போராட்டமானது 74 வருட சாபத்தை இல்லாதொழிப்போம் எனும் தொனிப்பொருளில்  அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நேற்று (22) இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருண் ஹேமச்சந்திர,


நாட்டில் தொடரும் நெருக்கடி

உடன் கடுகதி தேர்தல் முறைமை என்பது வெறும் சாதாரண விடயம் மாத்திரமே...! :அருண் ஹேமச்சந்திரா கருத்து (Video) | Sri Lanka With Mustard Election System Ranil

"நாட்டில் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய நீண்ட வரிசைகளில் காத்திருந்து சிரமப்படுவதையும், வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்களுக்கு நிலவும் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்த முடியாமல் அரசு தள்ளாடிக் கொண்டு இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலை தோல்வியடைந்த அரசாங்கத்தின் பிழையான முடிவுகளால் ஏற்பட்ட நிலையே தவிர வேறு எதுவுமில்லை" என அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

உடன் கடுகதி தேர்தல் முறைமை என்பது வெறும் சாதாரண விடயம் மாத்திரமே...! :அருண் ஹேமச்சந்திரா கருத்து (Video) | Sri Lanka With Mustard Election System Ranil

தோல்வி காணும் அரசியல் தலைமைகள்

உடன் கடுகதி தேர்தல் முறைமை என்பது வெறும் சாதாரண விடயம் மாத்திரமே...! :அருண் ஹேமச்சந்திரா கருத்து (Video) | Sri Lanka With Mustard Election System Ranil

"நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் வெறுமனே ஆட்சியாளர்களை மட்டும் மாற்றி ஜனாதிபதி தனது பதவியினை தக்க வைத்திருப்பது வேடிக்கையான விடயம்.

பசில் ராஜபக்ச நிதியமைச்சு பதவியை ஏற்கும் போது ஏழு மூளை கொண்ட ஒருவர் நாட்டை கட்டியெழுப்புவார் என கனவு காணப்பட்டது. அதுவும் ஆட்சியாளர்களினால் முடியாமல் போனது.

பின்னர் ரணில் விக்ரமசிங்க அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தி தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள திட்டம் தீட்டினர். இருப்பினும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்க அவர்களினால் நாட்டிற்கு குறைந்தது 600 மில்லியன் டொலரை கூட கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்குப் பின்னால் சுயநலமிக்க ஒரு தொழிலதிபர் தம்மிக பெரேராவை தற்போது நாடாளுமன்றத்திற்கு அழைத்து நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

உடன் கடுகதி தேர்தல் முறைமை என்பது வெறும் சாதாரண விடயம் மாத்திரமே...! :அருண் ஹேமச்சந்திரா கருத்து (Video) | Sri Lanka With Mustard Election System Ranil

இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் போலியானவை என மக்கள் உணர்ந்து விட்டதை மறந்து செயற்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பதவி விலகி நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் அரசாங்கம் அறிவித்தது போன்று தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது."

நீங்கள் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதில் பயன் ஏதும் கிட்டுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அருண் ஹேமச்சந்திர இவ்வாறு பதிலளித்தார்.

உடன் கடுகதி தேர்தல்

“இந்த ஆட்சியாளர்களுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் உலகளாவிய ரீதியில் தேர்தல் ஒன்று உள்ளது உடன் கடுகதி தேர்தல் என்ற முறைமை மூலம் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பது என்பது வெறும் சாதாரண விடயம் மாத்திரமே. 

அதுமாத்திரமன்றி நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பல தொழிற்சங்கங்கள் மேலதிக கொடுப்பனவுகள் இன்றி தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ள நிலையில் தேர்தல் ஒன்றை முகம் கொடுப்பதற்கு பசில் ராஜபக்ச அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு லட்சம் வேலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி இருக்கின்ற நிலையில் தேர்தல் ஒன்றை நடத்துவது மூலம் நாடு பாரிய செலவினத்தை எதிர்நோக்கும் என்ற விடயம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆட்சியாளர்கள் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக நடத்தும் வெறும் நாடகம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் சந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் “மக்களை வாட்டி வதைக்கும் கோட்டாபய, ரணில் ஆட்சியை விரட்டியடிப்போம்”, “மக்கள் நல ஆட்சியை கட்டியமைப்போம்”, “வாருங்கள் மக்களே அநீதிக்கு எதிராக அணிதிரள்வோம் வாருங்கள்“, என்ற பதாதைகளை ஏந்தியவாறும் நாட்டின் தேசிய சொத்துக்கள் விற்பனை செய்வதை தடுக்குமாறு கோஷமிட்டு தீப்பந்தம் ஏற்றி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.    

இந்திய உயர் மட்ட பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்துள்ளனர் 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US