இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள்! நிழல் உலகம் குறித்து அதிர்ச்சி தகவல்
இலங்கையில் செயற்படும் முக்கிய நிழல் உலகக்குழுக்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
நிழல் உலகக்குழுக்கள்
அண்மைக்காலமாக இலங்கையின் முக்கிய நிழல் உலகக்குழுக்கள் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் கொலை மற்றும் கப்பம் போன்ற குற்றச் செயல்களை முன்னெடுத்துள்ளனர்.

அதற்குத் தேவையான துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை படகுகள் வழியாக வெளிநாடுகளில் இருந்து தருவித்துக் கொள்வதாக பொலிசாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது.
கடந்த காலங்களில் போதைப் பொருட்களுடன் பெருமளவு ஆயுதங்களும் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.