வெளிநாடொன்றில் ஈழத்தமிழ் பெண்ணொருவருக்கு முதல் முறையாக கிடைத்துள்ள முக்கிய பதவி

Sri Lankan Tamils Tamils Sri Lanka Norway
By Shadhu Shanker Sep 12, 2026 08:10 PM GMT
Report

இலங்கை உள்நாட்டுப் போரின்போது தனது மூன்று வயதில் அகதியாக நோர்வே சென்ற கம்சி குணரத்னம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

38 வயதான கம்சி குணரத்னம், நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராவார்.

ஒஸ்லோவை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அன்றைய தினமே பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

போக்குவரத்து அமைச்சர்

இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல்  போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த ஜோன்-இவர் நிகார்டை பதிலாக கம்சி குணரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

வெளிநாடொன்றில் ஈழத்தமிழ் பெண்ணொருவருக்கு முதல் முறையாக கிடைத்துள்ள முக்கிய பதவி | Kamzy Gunaratnam Named Norway S Transport Minister

கம்சி குணரத்னத்தின் பொறுப்பின் கீழ் நோர்வேயின் வீதிகள், தொடருந்து, பொது போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகள் வருகின்றன. அவரது நியமனம் தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கம்சி குணரத்னத்திடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதுடன், அவர் பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வருகிறார்.

கடந்த சில தசாப்தங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்கும் இரண்டாவது நபர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாடாளுமன்றத்தின் போக்குவரத்துக் குழுவில் 11 மாதங்கள் பணியாற்றிய அனுபவத்தைத் தவிர, போக்குவரத்துத் துறையில் அவருக்கு விரிவான அனுபவம் இல்லை என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஈழத்தமிழர்

இலங்கையில் இருந்து நோர்வேக்கு கம்சி குணரத்னம் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிய அவரது குடும்பம், 1991ஆம் ஆண்டு நோர்வேக்கு சென்றது.

அவர்கள் ஆரம்பத்தில் நோர்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள ஹம்மர்ஃபெஸ்ட் நகரில் குடியேறிய பின்னர், ஒஸ்லோவுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு கிரோருட்டலன் பகுதியில் கம்சி குணரத்னம் வளர்ந்தார்.

அவர் ஒஸ்லோ நகர சபையில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதில் 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் பிரதி மேயராகவும் பதவி வகித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு முதல் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வரும் அவர், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

வெளிநாடொன்றில் ஈழத்தமிழ் பெண்ணொருவருக்கு முதல் முறையாக கிடைத்துள்ள முக்கிய பதவி | Kamzy Gunaratnam Named Norway S Transport Minister

கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் நாடாளுமன்றத்தின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகளுக்கான நிலைக்குழுவின் முதலாவது பிரதி தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார். போரின் நினைவுகளை பகிர்ந்த கம்சி இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிச் சென்ற தனது அனுபவங்களை கம்சி குணரத்னம் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் நோர்வே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், போரால் பாதிக்கப்பட்ட நாட்டில் தான் பிறந்ததாகவும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டபோது கர்ப்பிணியாக இருந்த தனது தாய் பாதுகாப்புக்காக பதுங்கியதாகவும் நினைவுகூர்ந்திருந்தார்.

அத்துடன், யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவை அதிர வைத்த 9/11 - 25 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த இரகசியங்கள்

அமெரிக்காவை அதிர வைத்த 9/11 - 25 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த இரகசியங்கள்

தவழ்ந்து வந்த மகிந்த - தலைமறைவான கருணா! அநுரவிற்கு பகிரங்க எச்சரிக்கை

தவழ்ந்து வந்த மகிந்த - தலைமறைவான கருணா! அநுரவிற்கு பகிரங்க எச்சரிக்கை

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US