தமிழ் மக்களை அறிவியல் மயப்படுத்துங்கள் அதுவே விடுதலைக்கான வழி

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Rajapaksa Family NPP Government
By T.thibaharan Oct 27, 2026 07:55 AM GMT
Report

ஈழத்தமிழர்களின் ஜனநாயக வழி அரசியலில் ஈழத் தமிழர்கள் நமது தாயக நிலத்தின் அமைவிடம், பாக்குநீரிணை அரசியல், இந்து சமுத்திர அரசியல் சார்ந்தும் சிந்திக்காமல் இலங்கையின் உள்நாட்டு அரசியலுக்குள் சிக்குண்டும், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசியல் அமைப்புகள் நின்றுகொண்டும் விடுதலையையும், தமக்கான அரசியல் உரிமைகளையும் பெற முயல்கின்றனர்.

அதேநேரம் மாறி மாறி வருகின்ற சிங்களத் தலைவர்களை நம்பியும், ஆதரவளித்தும், அவர்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு இருக்கின்றனர்.

ஆயினும் அம்புலிமாமா கதை படித்து வளர்ந்த தமிழ் சமூகம் விடாமுயற்சியாக வீரமாதித்தன் கதைபோல மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்த பாதையிலேயே பயணிக்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு பின்னர்

காலத்துக்குக் காலம் சிங்களத் தலைவர்களை நம்புவதுபோலவே தற்போதும் அநுரகுமார திசாநாயக்கவை ஏதோ நீதிமான் போன்று பேசுவதும், அதேநேரம் சிங்கள தலைவர்களிடையே ஏற்படுகின்ற அரசியல் அதிகாரப் போட்டியில் தங்களுக்கு ஏதோ கிடைத்து விடும் என்றும் நம்புகின்றனர்.

அதனைத்தான் இன்றைய தமிழ் அரசியல் தலைவர்களும், சமூகவலைத்தளங்களினதும், ஊடகங்களினதும் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

தமிழ் மக்களை அறிவியல் மயப்படுத்துங்கள் அதுவே விடுதலைக்கான வழி | Bring Scientific Awareness To The Tamil People

இதிலிருந்து தமிழ் மக்கள் தம்மை திருத்திக் கொள்ளாமல், இதனை நிராகரிக்காமல் தமிழ் மக்களுக்கான விமோசனமில்லை. ஈழத் தமிழர்களின் அரசியல் இயலாமை, அறிவியல் வறுமை, நீண்டகால அரசியல் பார்வையின்மை என்பனவற்றினால் சிங்களத் தலைவர்களுக்கு உள்ளக அரசியலில் நெருக்கடிகள் ஏற்படுகின்றபோது அதனைக் கண்டு மகிழ்ந்து, குதூகலித்து, புலகங்கிதமடைந்து அது பழி என்றும், பாவம் என்றும், ஊழ்வினை என்றும் தமக்குத் தாமே சமாதானம் சொல்லி தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில்தான் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தின் மீது பெரும் மனக்கொதிப்பும் பழிவாங்கல் உணர்வும் அவர்களுக்கு ஏதேனும் சிறிய துன்பங்களை ஏற்பட்டாலும் அதனைக் கண்டு குதூகலித்து கொண்டாடி தங்கள் அரசியல் அபிலாசைகளை மறந்து தமக்கு எது கிடைக்காவிட்டாலும் தமக்கு இரண்டு கண் இழக்கப்பட்டாலும் எதிரிக்கு சகுனப்பிழை வந்தால் போதும் என்று எண்ணும் தொடர் தோல்வியின் மனப்பிறழ்வு மனப்பாங்கை வெளிப்படுத்துவதனால் ஈழத் தமிழர்களுடைய அபிலாசை கிட்டப்போவதில்லை.

தமிழர்களின் பொது எதிரியாகிய சிங்கள பௌத்த பேரினவாத அரசியலையும், அதன் தலைமைகளையும் பொது எதிரியாக எடுத்துக்கொண்டு அந்த வரையறைக்குள் நின்று கொண்டு எதிரிக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் அவர்களை நெருக்கடிக்குள்ளாக்கி நிர்ப்பந்தத்திற்கு உட்படுத்துவதன் மூலமே தமிழ் மக்கள் தமக்கான அற்ப சொற்ப சலுகைத்தானும் பெறமுடியும்.

அவ்வாறு எதிரியை தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்காமல் பொது எதிரியை இரண்டாக வகுத்து அவர்களுக்குள் ஏற்படுகின்ற நெருக்கடியின்போது ஒரு எதிரிக்கு சார்பாக நடந்து மற்றவரை பலவீனப்கடுத்தும் செயல் முறையை கடைப்பிடிப்பதனால் எதிரியின் ஒருபகுதியினர் மேன்மேலும் வளர்ந்து செல்வர் என்பதை அறிவார்ந்த அர்த்தத்தில் புரிந்து கொள்ளத் தவறுகின்றனர்.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தலில்

அந்தத் தவறை தொடர்ந்து இன்று வரை செய்து வருகின்றனர் என்பதுதான் தமிழ் அரசியலின் சாபக்கேடாகவும், தமிழர்களின் அரசியலின் போக்காகவும், கொள்கையாகவும் கொண்டிருப்பது தமிழினத்தை தாமே அழிப்பதற்கான வாய்க்காலை வெட்டுவதாகவே அமையும்.

இத்தகைய அரசில் அறிவற்ற மனப்போக்குகளின் வெளிப்பாடாகத்தான் 2010 ஜனாதிபதித் தேர்தலில் பல தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை தமிழர்களை கொன்றொழித்ததமைக்காகவே பௌத்த சிங்கள பேரினவாத அரசால் சிங்கள ப் படைகளின் தளபதிக்கு பீல்மாஷல் பட்டம் வழங்கப்பட்டது.

தமிழ் மக்களை அறிவியல் மயப்படுத்துங்கள் அதுவே விடுதலைக்கான வழி | Bring Scientific Awareness To The Tamil People

வேற்றுநாட்டுப் படைகளுடன் சண்டையிட்டு வெற்றிபெற்ற ராணுவ தளபதிக்கு பீல்மாஷல் பட்டம் வழங்கப்படுவது உலக நியதி.

அப்படியானால் தமிழர்களின் அரசை பறித்த, அல்லது தமிழர்களின் தேசத்தை கைப்பற்றியமைக்காகவே அவருக்கு அந்தப் பட்டம் வழங்கப்பட்டது என்பதுதான் உண்மையாகும்.

அத்தகைய பீல்மாஷல் சரத் பொன்செக்கா மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டபோது அவரை தமிழ் தலைமைகள் எனப்படுவோர் ஆதரித்தனர் என்பது எவ்வளவு கொடூரமான மனவியாதி என்பதை வெளிப்படுத்துகிறது.

மகிந்த ராஜபக்சவின் இனவழிப்பு, போர்க் குற்றம், மனிதகுலத்துக்கு எதிரான கொடூரங்கள் என்பவற்றை செய்தவர்களில் “ராஜபக்சவை விட பொன்சேகா குறைவான தீமை” என்ற கணக்குப் போடும் முட்டாள்தனமான கணக்கே முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு நேரடியாக தலைமைதாங்கிய இராணுவத் தலைமை தளபதியான சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்து, அந்த வஞ்சிக்கப்பட்ட துன்ப துயரங்களை சுமக்கும் மக்களையே வாக்களிக்க வைத்த மிகமோசமான அரசியலை வரலாற்றைச் செய்தவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது, மன்னிக்கவும் கூடாது.

வரலாற்று நெடுகிலும் தமிழர்கள் கண்ட பாடம்

பொது எதிரியை எப்போதும் எதிரியே. அவனுக்கு துணைபோனவனும் தமிழர்களின் எதிரியே.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்கள் வெற்றி தனது போட்டியில்"தமிழ் மக்கள் என்னை ஆதரித்தார்கள் ஏனெனில் "தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையோ, இறைமையோ தேவையில்லை

தமிழ் மக்களை அறிவியல் மயப்படுத்துங்கள் அதுவே விடுதலைக்கான வழி | Bring Scientific Awareness To The Tamil People

இப்போது அவர்கள் அதை கேட்கவில்லை என்றும் அதனால் தான் அவர்கள் என்னை ஆதரித்தார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு மாத்திரம் நின்று விடாமல் "தமிழ் மக்கள் சிங்கள மக்கள் என்ற பெருமரத்தில் பற்றி வளரும் கொடிகள் மட்டுமே" என்று தமிழ் மக்களின் உரிமையை சிறுமைப்படுத்தியும் பேசினார்.

இதிலிருந்து சிங்கள தேசத்தின் தலைமைகள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மதங்கொண்ட சிங்கள யானைகள் தமக்கிடையே சண்டையிட்டாலும் புல்லாக நசிவது தமிழர்கள்தான். அதேநேரம் சிங்கள யானைகள் தமக்கிடையே புணர்ந்து இன்புற்றாலும் அதன் காட்சிறாய்த்தலுக்குட்பட்டு நசிந்தழிவது தமிழர்களாகவே இருக்கிறார்கள்.

இது வரலாற்று நெடுகிலும் தமிழர்கள் கண்ட பாடம். 2010 தேர்தலுக்குப் பிற்பட்ட காலத்தில் சரத் பொன்சேகா இராணுவத்தில் பணியாற்றும் போது அரசியலில் ஈடுபட்டமை, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக சதி செய்து ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதான தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டார்.

இராணுவ நீதிமன்றத்தால் சுவிசாரணை 2010 மார்ச் 16இல் தொடங்கி, ஜூலை 12 ஜூலை 15, வரை தொடர்ந்தது விசாரிக்கப்பட்டு, ஊழல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களுக்காக குற்றவாளியாக சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதல் இராணுவ நீதிமன்றத் தீர்ப்பு 2010 ஆகஸ்ட் 13இல் முதல் இராணுவ நீதிமன்றத் தீர்ப்பு அரசியலில் ஈடுபட்டமை தொடர்பானது.

அதைத் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டு மற்றும் சிவில் நீதிமன்ற வழக்கில் தீர்ப்புகள் வந்தன.

36 மாதங்கள் ஆண்டுகள் சிறைத்தண்டனை

இரண்டாவது இராணுவ நீதிமன்றத் செப்டெம்பர் 2010இல் ஆயுதக் கொள்வனவில் முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பான 4 குற்றச்சாட்டுகளுக்காக இரண்டாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பு 17 செப்டெம்பர் 2010இல் ஆயுதக் கொள்வனவில் முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பான 4 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 30 செப்டெம்பர் 2010 அன்று இத்தீர்ப்பை அங்கீகரித்தார்.

தமிழ் மக்களை அறிவியல் மயப்படுத்துங்கள் அதுவே விடுதலைக்கான வழி | Bring Scientific Awareness To The Tamil People

இதையடுத்து அவர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டு, பதவிகள், பதக்கங்கள் மற்றும் ஓய்வூதியம் பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்தும் சிவில் நீதிமன்றத்தின் விசாரணை தொடர்ந்தது நடாத்தப்பட்டு அரசாங்கத்தை போர்க் குற்றங்களுடன் தொடர்புபடுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமை என்ற குற்றத்திற்காக 18 நவம்பர் 2011இல் கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, 36 மாதங்கள் ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.‌

சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் பல கட்டங்களாக மொத்தச் சிறைத்தண்டனை 5 ஆண்டுகள் 6 மாதங்கள் (66 மாதங்கள்) ஆகும்.

இதனைக் கண்டும் தமிழர்கள் குதூகலித்தார்கள் தமிழ் ஊடகங்கள் எழுதி தள்ளின சமூக வலைத்தளங்களில் சரத் தந்தை தண்டிக்கப்பட்டார் என உலக ஆங்கிலம் புலகாங்கிதமடைந்த தமிழர்கள் ஏராளம்.

இங்கே எதிரிக்கு துன்பம் வந்து தமிழர்கள் இன்பம் அடைவதுல விட தமிழர்கள் தங்கள் தேசிய அபிலாசை அடைவதற்கான வழியைப் பற்றிய சிந்திக்க வேண்டும் அதனை அடைவதுதான் இலக்கே தவிர எதிரியின் துன்பம் நமக்கு இன்பமாகாது.

நமக்கு இன்பம் என்பது நமது தேசிய அபிலாசை அடைவதுதான். இவ்வாறு நட்பத்தனமாக அறிவற்ற இன்பமடைந்திருக்கின்றபோது 2012இல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மன்னிப்பு வழங்கி பொன்சேகாவை விடுதலை செய்தார்.

ஆனால், அது முழுமையான பொதுமன்னிப்பு அல்ல என்பதாலும், அவரது குடிமை உரிமைகள் முழுமையாக மீளவில்லை என்பதாலும் அவர் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

அரசாங்கம் கைமாறியதை அடுத்து

இந்நிலையில் 2015ல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை அரசின் அரசாங்கம் கைமாறியதை அடுத்து அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் பொன்சேகாவுக்கு முழு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

இதன் மூலம் அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்பட்டு, பறிக்கப்பட்ட நான்கு நட்சத்திர ஜெனரல் பதவி, பதக்கங்கள், ஓய்வூதியம் மற்றும் அனைத்து சிறப்புரிமைகளும் மீண்டும் வழங்கப்பட்டன.

தமிழ் மக்களை அறிவியல் மயப்படுத்துங்கள் அதுவே விடுதலைக்கான வழி | Bring Scientific Awareness To The Tamil People

இதிலிருந்து சிங்கள தேசத்தின் உண்மையான அரசியல் சித்து விளையாட்டுக்களை ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்ள தவறுகின்றனர்.

பொன்சேகாவின் கைதும், தண்டனையும் சிங்கள அரசியலின் உள் முரண்பாடுகளும், அதிகாரப் போட்டியும், அரசியல் அதிகார பழிவாங்கலாகவே பார்க்கப்படவேண்டும்.

ஆனால் மாறாக இதணை பழி என்றும், பவம் என்றும், ஊழ்வினை என்றும் தமிழர் தரப்பு தமது இயலாமையையும், முட்டள்த்தனத்தையும், அறிவீனத்தையும், சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் ஏதோ தாம் எதையோ சாதித்து விட்டது போன்று சொல்லி தமது முட்டாள்த்தனத்தை வெளிப்படுத்தினர்.

அதேபோல சிங்கள தேசத்தில் அரகலயப் போராட்டம் ஏற்பட்டு அதன் நெருக்கடியினால் கோட்டாபய ராஜபக்ச பதவியை விட்டு, நாட்டை விட்டு ஓடியபோது அதற்கும் குதூகலித்தனர்.

ஏதோ ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்றும், கோட்டபாய நாடு திரும்ப முடியாது என்றும் கனவு கண்டனர். ஆனால் மூன்று மாதங்களுக்குள் கோட்டபாய ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு வந்து விட்டார்.

அவர் இன்று தனது வாழ்வை இன்பமாகக் கழிக்கிறார் என்பதை இந்த தமிழர்கள் உணர்ந்தாரில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதி பதவியை ஏற்றவுடன் ஏதோ தமிழ் மக்களுக்கு பாலாறும் தேனாறும் ஓடும் என்று கனவு கண்டு பிதற்றிய தமிழர்கள் ஏராளம். அந்நிலையில் சிங்கள தேசத்தின் ஆட்சி அதிகார வர்க்கத்தின் உள் முரண்பாடுகளும் போட்டிகளும் ஒருவரை ஒருவர் முடக்கும் செயலில் ஈடுபடுவது இயல்பானது.

அந்த முடக்கும் செயல்களின் ஒரு பகுதி தான் ராஜபக்ச குடும்பத்தினர் மீதான பல்வேறு ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது, விளக்கமறியல் மற்றும் பிணை ஆகிய நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில்

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏர்பஸ் விமான கொள்முதல் தொடர்பான ஊழல் விசாரணைக்காக 04 செப்டம்பர் 2026 அன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு, 2026, அக்டோபர் 23 வரை தொடர்ந்து விளக்கமறியலில் உள்ளார்.

தமிழ் மக்களை அறிவியல் மயப்படுத்துங்கள் அதுவே விடுதலைக்கான வழி | Bring Scientific Awareness To The Tamil People

இவரது பிணை மனுக்கள் பல முறை நிராகரிக்கப்பட்டுள்ளன. நாமல் ராஜபக்ச தொடர்ந்து விளக்கமறியலில் உள்ள நிலையில், யோஷித ராஜபக்ச கடற்படையில் முறையற்ற முறையில் பணியில் சேர்ந்ததாகக் கூறப்படும் வழக்கில் 2026, 17 ஜூன் 2026 அன்று கைது செய்யப்பட்டார். அதே நாளில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஷிரந்தி ராஜபக்ச தேசிய சேமிப்பு வங்கியில் (NSB) இருந்து 10 மில்லியனை மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் 07 அக்டோபர் 2026 அன்று கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதிமன்றத்தால் அக்டோபர் 13 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர், உடல்நிலைக் காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2026, அக்டோபர் 16 அன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆயினும் வெளிநாடு செல்லத் தடையும் விதிக்கப்பட்டது.

அதேநேரம் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தின் அழைப்பாணைக்கு சமூகமளிக்கத் தவறியதால், மாத்தறை நீதிமன்றத்தால் இவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2014 ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் 14 அக்டோபர் 2026இல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்தது. இவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகக் கருதப்படுவதால், இவரைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரடியாகக் கைது செய்யப்படவில்லை. இருப்பினும், 2026, அக்டோபர் 12 அன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கும் ஈழத் தமிழர்கள் குதூகலிக்கின்றனர். இங்கே எமது தேவை என்ன? எமக்கான இலக்கு என்ன? என்பதை எல்லா சந்தர்ப்பங்களிலும் ஈழத்தமிழர்கள் மறந்துவிடுகின்றனர். 

இரண்டு மணி நேரம் விசாரணைக்கு உட்பட்டு

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மீதான விசாரணைகள் என்பது பெரும்பாலும் சட்டரீதியான விசாரணைக் கட்டத்திலேயே உள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் அவர் இன்னும் சந்தேகநபர் அல்ல என்றாலும், அதற்கான பயணத் தடை நீடிக்கிறது. மற்ற வழக்குகளில் அவர் சாட்சியம் அளிக்கவோ வாக்குமூலம் பதிவு செய்யவோ அழைக்கப்பட்டு வருகிறார்.

தமிழ் மக்களை அறிவியல் மயப்படுத்துங்கள் அதுவே விடுதலைக்கான வழி | Bring Scientific Awareness To The Tamil People

கோட்டபாய ராஜபக்ச மீதான குற்ற விசாரணைகள் பல முனைகளில் நடைபெற்று வருகின்றன. அவர் எந்த வழக்கு விவகாரங்களில் அவர் சந்தேகநபராகவோ அல்லது சாட்சியாகவோ தொடர்ந்து ஆஜராகி வருகிறார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரத்தில் அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைகளுக்கும் ஊடகங்களின் காதுகளுக்கும் கேட்கவில்லை அதனைக் கேட்க நம்மவர்கள் தயாரில்லை.

மேலும் 2006ஆம் ஆண்டு நான்கு மிக் விமானங்கள் கொள்முதல் செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக 2026, செப்டம்பர் 11 அன்று நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகினார்.

அதேநேரம் 2011ல் லலித்-குகன் காணாமல் போதல் வழக்கு, 2011ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இரண்டு உரிமை ஆர்வலர்கள் தொடர்பான வழக்கில், பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்திய தமது பங்கு குறித்து சாட்சியம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2026, செப்டம்பர் 29 அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்திற்கு இணையவழியில் சாட்சியம் அளித்தார். பல கேள்விகளுக்கு "நினைவில்லை" என்று பதிலளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்தபோது வீடமைப்புத் திட்டங்களில் மோசடி நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்தியது.

இது தொடர்பாக 2026, மார்ச் 17 அன்று ஆணைக்குழுவில் ஆஜராகி, சுமார் இரண்டு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவைதான் ஈழத் தமிழர்களுக்கு கண்களுக்கும் காதுகளுக்கும் தெரிகிறது.

ஈழத் தமிழர்கள் தமது இலக்கு என்ன என்பதை

சிங்கள தேசத்தின் புனித நுாலான மகாவம்சத்தில் மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச இருவரது பெயரும் பதியப்பட்டுவிட்டது.

தமிழ் மக்களை அறிவியல் மயப்படுத்துங்கள் அதுவே விடுதலைக்கான வழி | Bring Scientific Awareness To The Tamil People

எனவே அவர்கள் இருவரும் ஒருபோதும் கைது செய்யப்ட மாட்டார்கள் என்பதே முடிந்த முடிவு.

சிங்கள அரசியலை உள்ளார்ந்த அர்த்தத்திலும், தத்துவார்த்த ரீதியிலும் சரிவர எடைபோட ஈழத்தமிழர் அரசியல்த் தரப்பில் இன்றுவரை யாரும் இல்லை என்பதை இது வெளிப்படுத்துகிறது.

ஈழத் தமிழர்கள் எப்போதும் தமது இலக்கு என்ன? மூலோபாயம் என்ன? நாம் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை என்ன? என்பது பற்றி ஒரு தெளிவான பார்வை தேவையாக உள்ளது.

அது பற்றி ஒரு தெளிவான எழுத்து மூல அரசியல் வேலை திட்டம் தேவையாக உள்ளது. அத்தகைய ஒரு வேலை திட்டத்தை உருவாக்கி தமிழ் மக்களுக்கு அதனை அரசியல் தத்துவார்த்த அர்த்தத்டதிலும் புரிய வைத்து, அறிவார்ந்த ரீதியில் அரசியலை முன்னெடுப்பது இன்றைய காலத்தின் தேவை.

அதனை விடுத்து "எமக்கு இரண்டு கண்கெட்டாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப் பிழை ஏற்பட்டாலே போதும்" என்ற இத்தகைய முட்டாள்த்தனமான சிந்தனை மனப்பாங்கில் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்யுங்கள் என தமிழ் அரசியல் தலைவர்களையும், அறிஞர்களையும், ஊடகங்களையும் வரலாறு வேண்டி இருக்கிறது.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 27 October, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US