தீவிரமடையும் சீரற்ற காலநிலை! நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு விடுமுறை
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (27) விடுமுறையை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மூடுவதற்கு முன்பிள்ளை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் தீர்மானித்துள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு
முன்பள்ளி சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து முன்பள்ளிகளினதும் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை, ஏற்கனவே திட்டமிட்டபடி உரிய பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அழகியல் பாடத்திற்கான செய்முறை பரீட்சை திட்டமிட்டபடி உரிய நிலையங்களில் நடைபெறும் என அனைத்துப் பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடர்புகளுக்கு.....
இது தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பரீட்சார்த்திகள் உரிய வலையத்தின் வலையக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு: உடனடி அழைப்பு இலக்கம் (Hotline): 1911, தொலைபேசி இலக்கங்கள்: 0112784208, 0112784537, தொலைநகல் (Fax): 0112784422