காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்: 5 பேர் பலி
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களில் சிறுமி ஒருவர் உட்பட குறைந்தது 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கான் யூனிஸில் உள்ள அல்-மாவாசி இடம்பெயர்ந்தோர் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலிலேயே 7 வயதுச் சிறுமி உட்பட்ட 4 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் அல்-நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல்
இதனையடுத்து, காசா நகரின் மேற்கேயுள்ள ரெமால் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேலிய ட்ரோன் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று(25.10.2026) இரவு சூஜையா சந்தை பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் மீது இஸ்ரேலின் குவாட்காப்டர் ட்ரோன்கள் நடத்திய தாக்குதலால் முகாமில் பெரும் தீப்பற்றி எரிந்தது.
இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் (800-க்கும் அதிகமானோர்) அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பலி
இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு பேச்சாளர் மஹ்மூத் பசல் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரை 74,555-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன், 1,75,727 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதிக்குப் பின்னரான காலத்தில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,559 ஆக உயர்ந்துள்ளது.
இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ள போதிலும், மீட்புக் குழுவினரால் அவர்களை அணுக முடியாத நிலை தொடர்கிறது.
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
புடின் அளித்த 10 பில்லியன் பவுண்டுகள்... வட கொரியாவில் மூளைச்சலவை செய்யப்படும் உக்ரைன் சிறார்கள் News Lankasri