இந்திய உயர் மட்ட பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்துள்ளனர்
சில மணி நேரங்களுக்கு இலங்கை வந்திருந்த இந்திய அரசின் உயர் மட்டப் பிரதிநிதிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமரின் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தியாவின் உயர் மட்டக்குழுவில் இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் க்வத்ரா, பொருளாதார விவகார செயலாளர் அஜே சென், இந்திய அரசின் பிரதான பொருளாதா ஆலோசகர் வீ.ஏ.நாகேஸ்வரன், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
இலங்கையின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன, பொருளாதார விவகார சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.சமரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri