இலங்கை கடற்பகுதியில் ஈரான் போர்க்கப்பலை பல துண்டுகளாக உடைத்த அமெரிக்கா! சர்வதேச அரங்கில் பதற்றம்
இலங்கை கடற்பகுதியில் ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை இந்திய மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. “இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படையற்ற மற்றும் ஜோடிக்கப்பட்டவை” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டுத்தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டுத்தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் நாட்டு கடற்படை கப்பல்களையும் தாக்கி அழித்து வருகின்றன.
இந்த நிலையில் ஈரானின் கடற்படை கப்பலான ‘ஐரிஸ் டெனா’ நேற்று அதிகாலையில் இலங்கை தெற்கு கடற்பகுதியில் இருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஈரான் கடற்படை கப்பலை தாக்கியது.
இதில் ஈரான் போர்க்கப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கத்தொடங்கியதுடன் அதிலிருந்த 180 பேரில் தற்போது வரை 87 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
பல துண்டுகளாக உடைந்த கப்பல்
.இந்திய பெருங்கடலில் இருந்த ஈரான் போர்க்கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடலுக்கு உள்ளே இருந்து குண்டுவீசி கடுமையாக தாக்கியிருந்தது.
இதில் கப்பல் பல துண்டுகளாக உடைந்து வெடித்து தீப்பற்றி எரியும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இலங்கை கடற்பகுதியில் ஈரான் நாட்டு போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கப்பல் சமீபத்தில் இந்தியாவுடன் நடந்த கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்று அதை முடித்துக்கொண்டு புறப்பட்டபோது இந்த துயரம் நடந்ததாக கூறப்படுகின்றது.
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam