பதற்றத்தினால் மூடப்படும் வான் பரப்புகள்! விமான சேவை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவிப்பு

SriLankan Airlines Dubai Iran-Israel Cold War Iran-Israel War
By Dhayani Mar 05, 2026 11:17 AM GMT
Report

புதிய இணைப்பு

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்கு உள்ளான பயணிகளுக்கு உதவ, மார்ச் 08, 2026 அன்று கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே கூடுதல் விமானத்தை இயக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.

அதன்படி, UL1205 என்ற எண்ணைக் கொண்ட கூடுதல் விமானம் மார்ச் 8, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 06.50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் பிற்பகல் 01.10 மணிக்கு லண்டனை வந்தடையும்.

அதன் பின்னர் UL1206 விமானம் அதே நாளில் பிற்பகல் 03.05 மணிக்கு லண்டனில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 06.55 மணிக்கு கொழும்பு வந்தடையும்.

 மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ, தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

மேலதிக தகவலுக்கு, 1979 (இலங்கைக்குள்) அல்லது +94 11 777 1979 (சர்வதேசம்) அல்லது WhatsApp (+94 74 444 1979) (செய்திகளுக்கு மட்டும்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேலும் தகவலுக்கு உங்கள் பயண முகவரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.srilankan.com ஐப் பார்வையிடலாம் என அறிவித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது முக்கிய விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 

இதன்படி, 2026 மார்ச் 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களிலும் கொழும்பிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து கொழும்பு வரும் 12 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மத்திய கிழக்கின் துபாய், ரியாத், டோஹா, தம்மாம் மற்றும் குவைத் ஆகிய இடங்களுக்கான சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன. 

முதலாம் இணைப்பு

ரியாத் மற்றும் டுபாய்க்கான ஸ்ரீலங்கள் எயார்லைன்ஸ் விமானங்கள் இன்று (05) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக அதன் வான்வெளியை திறந்ததன் மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் பல விமான நிறுவனங்களால் பல சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது.

இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   

அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை

அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை

விமானங்கள் 

கொழும்பு - டுபாய்: இன்று பயணிக்கவிருந்த UL 225 வானூர்தி சேவை.

டுபாய் - கொழும்பு: டுபாயிலிருந்து நாடு திரும்பவிருந்த UL 226 வானூர்தி சேவை.

கொழும்பு - ரியாத்: ரியாத் நோக்கிப் பயணிக்கவிருந்த UL 265 மற்றும் அங்கிருந்து வரவிருந்த UL 266 ஆகிய வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 

பதற்றத்தினால் மூடப்படும் வான் பரப்புகள்! விமான சேவை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவிப்பு | Srilanka Flight Service Details

பயணிகளுக்கான அறிவுறுத்தல்

  இதேவேளை பயணிகள் மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 24 மணிநேர தொடர்பு மையத்தை 1979 எனும் இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை, நேற்று (04) விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 04 விமானங்கள் இயக்கப்பட்டதாக விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

பதற்றத்தினால் மூடப்படும் வான் பரப்புகள்! விமான சேவை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவிப்பு | Srilanka Flight Service Details

இதேபோல், மஸ்கட்டிலிருந்து ஸ்மார்ட் விங்ஸ் விமானம் 3.Z.- 7648 சரக்கு சுமையுடன் ஓமானின் மஸ்கட்டிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானம் 8.D.- 822 ஆகியவை 133 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு அதிகாலை 12.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

இதற்கு கூடுதலாக, துபாயிலிருந்து ஃப்ளை துபாய் விமானம் F.Z.- 569 மற்றும் எமிரேட்ஸ் விமானம் EK- 654 முறையே மாலை 4.50 மணிக்கும் 6.45 மணிக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US