தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் தவறான அறிக்கை வெளியிட்ட சுரேஷ் சலே: பொன்சேகா வெளியிட்ட முக்கிய தகவல்

Sri Lanka Army Gotabaya Rajapaksa Sarath Fonseka Suresh Salley
By Kanthan Jul 21, 2026 03:03 AM GMT
Report

நான் இராணுவத்தளபதியாக பொறுப்பேற்ற போது அரசாங்க புலனாய்வுத்துறையில் இருந்த கபில ஹெந்தவித்தாரனவும் சுரேஷ் சலேவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 9,000 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாக தனக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ள மேலதிக கருத்துக்கள்,

சலேவின் அறிக்கைகள் மற்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்கு 9,000 மட்டும் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் நடக்கும் முறையை வைத்து நான் ஒரு ஆய்வு செய்தேன்.

இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர்: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர்: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

தனியாக செய்த ஆய்வு

கிழக்கில் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற ஊகிப்பு, தாக்குதல் வியூகம் , எந்தப் பக்கத்தைப் பாதுகாத்துத் தாக்குகிறார்கள், பங்கர்களை எப்பக்கத்தில் அமைத்துக் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பதை நன்கு ஆய்வு செய்தேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் தவறான அறிக்கை வெளியிட்ட சுரேஷ் சலே: பொன்சேகா வெளியிட்ட முக்கிய தகவல் | Suresh Sallay Sarath Fonseka Gotabaya Rajapaksa  

யாழ்ப்பாணம் முகமாலையில் சுமார் 2,000 பேர் இருக்கிறார்கள். இப்படி நான் கணக்கிட்டுப் பார்த்தபோது, இது நிச்சயமாக 30,000-க்கும் அதிகம் என்று எனக்குப் புரிந்தது.

இந்த 9,000 அல்லது 10,000 பேரைக் கொண்டு இவர்களுக்கு இவ்வாறு தாக்குதல் நடத்த முடியாது. குறைந்தபட்சம் 30,000 பேராவது இருக்க வேண்டும் என்பதுதான் எனது கணிப்பு.

சிறிது காலம் கழித்து இக்பால் அதாஸ் என்ற புலனாய்வு ஊடகவியலாளர் அக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 35,000 பேர் இருப்பதாக ஒரு கட்டுரை எழுதினார்.

அப்போது தான் நான் இதுதான் சரியான எண்ணிக்கை என்று தெரிந்து கொண்டேன். எனவே இவர்களால் எந்தப் பயனும் இல்லை, பொய் அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

கொழும்பில் உளவுத்தகவல் கூட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ன செய்கிறது என்று கூடத்தெரியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்தைப் பற்றிய புரிதலும் இல்லை. அதனால் தான் நான் ஹெந்த விதாரன- சுரேஷ் சலேவை நீக்கினேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் தவறான அறிக்கை வெளியிட்ட சுரேஷ் சலே: பொன்சேகா வெளியிட்ட முக்கிய தகவல் | Suresh Sallay Sarath Fonseka Gotabaya Rajapaksa

இதன்பின்னர் கோட்டாபய ராஜபக்ச இவர்களைச் சேர்த்துக் கொண்டு, கொழும்பில் உளவுத் தகவல் கூட்டம் என்று நடத்தி, கொழும்பு உளவு வேலையை கோட்டாபய தான் ஹெந்தவிதாரன மற்றும் சலேவுடன் இணைந்து தனியாக ஒரு குழுவை அமைத்துச் செயற்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடியாகப் போரிட்டு உன்னதமான சேவை செய்த, சிறந்த உளவுத்துறைத் தலைவர் என்று தானே சொல்கிறார்கள்?

இவர்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு உன்னதமான சேவை செய்தவர்கள். ஈழம் போரின் நான்காம் கட்ட நடவடிக்கைக்கு அவர்கள் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தவிர்த்து முக்கிய சாட்சியாளராக மாறிய சந்தன விக்ரமரத்ன! வாக்குமூலத்தில் வெளியான தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தவிர்த்து முக்கிய சாட்சியாளராக மாறிய சந்தன விக்ரமரத்ன! வாக்குமூலத்தில் வெளியான தகவல்கள்

கொடூர தாக்குதலின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியான ராஜபக்ச குடும்பத்தினர்..! அம்பலமாகும் சதித்திட்டம்

கொடூர தாக்குதலின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியான ராஜபக்ச குடும்பத்தினர்..! அம்பலமாகும் சதித்திட்டம்

   

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US