இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

Galle Sri Lanka Sri Lanka Navy Iran
By Dhayani Mar 04, 2026 10:58 AM GMT
Report

புதிய இணைப்பு

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதாக முன்னர் அறிவிக்கப்பட்ட ஈரானிய கப்பல், நீர்மூழ்கிக் கப்பலால் (Submarine) தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படையினரின் உத்தியோகபூர்வ தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. 

ஆரம்பத்தில் தொழில்நுட்பக் கோளாறு அல்லது விபத்து என கருதப்பட்ட நிலையில், தற்போது நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இது நீர்மூழ்கிக் கப்பலால் நடத்தப்பட்ட தாக்குதல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை கண்டறிய இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் இன்று (04) மதியம் காலியில் உள்ள கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு விரைந்து, காயமடைந்தவர்களின் நிலைமையை ஆராய்ந்துள்ளனர்.

மூன்றாம் இணைப்பு

இலங்கை கடல் எல்லைக்குள் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சி.டி.ஆர் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கப்பலில் 180 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகளில் கடற்படை சுழியோடிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏனையோருக்கு என்ன நடந்தது என்பது பற்றி கடற்படை ஆராய்ந்து வருவதுடன், இன்று (04) மாலை 3 மணியளவில் அது தொடர்பில் அவசர ஊடக சந்திபொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இரண்டாம் இணைப்பு

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான 'ஐரிஸ் தேனா' என்ற ஈரானிய கப்பலில் இருந்த 180 பேரில் சுமார் 30 பேர் காயமடைந்து காலி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, ஈரான் கப்பலொன்று காலி கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளதா அல்லது அதன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதா என சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் எம்.பினால் கேள்வியெழுப்பப்பட்டிருந்து.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இன்று (04) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம் - இளம் யுவதி கழுத்தறுத்து கொலை

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம் - இளம் யுவதி கழுத்தறுத்து கொலை

இலங்கை உடன்படிக்கை

1979 ஆம் ஆண்டின் 'சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு' (International Convention on Maritime Search and Rescue) உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் படி, கடலில் ஆபத்தில் இருக்கும் எவருக்கும் அவர்களின் தேசியத்தைப் பாராது மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டியது இலங்கையின் கடமையாகும் என்பதை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள் | Iranian Ship Crashes In Sri Lankan Waters

முதலாம் இணைப்பு

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

காலி கடல் பகுதியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஈரானின் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலினால் பதற்றம்! பதுங்கு குழிகளுக்குள் மக்கள்

ஈரானின் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலினால் பதற்றம்! பதுங்கு குழிகளுக்குள் மக்கள்

மீட்பு பணிகள் தீவிரம்

குறித்த கப்பலில் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விசேட கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன.

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள் | Iranian Ship Crashes In Sri Lankan Waters

குறித்த கப்பல் விபத்துக்குள்ளான பின்னர் அபாய சமிக்ஞையை (Distress call) வெளியிட்டதாகவும், இதனையடுத்து மீட்புப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 5:08 மணியளவில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அவசர செய்தி கிடைத்ததினையடுத்து உடனடியாகச் செயல்பட்ட இலங்கை கடற்படை, காலை 6:00 மற்றும் 7:00 மணியளவில் மீட்புப் படகுகளை அனுப்பி வைத்தது. 

கடலில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும், மீட்பு பணிகள் முப்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஈரான் கப்பலொன்று காலி கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளதா அல்லது அதன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதா என சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் எம்.பினால் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. 

லெபனானின் எல்லைப் பகுதிகளில் பதற்றம்

லெபனானின் எல்லைப் பகுதிகளில் பதற்றம்

பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்ட விடே அறிவிப்பு

பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்ட விடே அறிவிப்பு

 


மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US