கோழியால் நேர்ந்த விபரீதம் - தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்
நுவரெலியா, லிந்துலை பகுதியில் மகன் ஒருவர், தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தந்தை படுகாயமடைந்துள்ளார்.
கோழியைக் கொன்று இறைச்சிக்காக உட்கொண்டதால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம்
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் லிந்துலை, மவுஸ்வெல்ல தோட்டத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபரால் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழியொன்று கொல்லப்பட்டு இறைச்சிக்காக உட்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த மகன் தந்தையுடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, மகன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பலத்த வெட்டுக் காயங்களுக்குள்ளான தந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திய மகன் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அறிகுறிகள் தென்படுமாயின் வீட்டிலேயே இருக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை