இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி வழங்க உறுதிப்பூண்டுள்ள இந்தியா!
இலங்கைக்கு உதவும் இந்தியா
கஸ்டமான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் தலைமையிலான குழுவினர் இன்று கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்தனர்.
வெளியுறவுச் செயலாளருடன் இந்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலர் அஜய் சேத், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் உட்பட்டவர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.
உறுதிப்பூண்டுள்ள இந்தியா
ஏற்கனவே வழங்கப்பட்ட எரிபொருள், மருந்து, உரம் மற்றும் பிற அத்தியாவசிய உதவிகளை மதிப்பாய்வு செய்த இந்திய பிரதிநிதிகள், இலங்கைக்கு ஆதரவளிக்க இந்திய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக இதன்போது குறிப்பிட்டனர்.
இந்தநிலையில் நாட்டுக்கு வழங்கும் உதவிகளுக்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நன்றி தெரிவித்தார்.
இதேவேளை இந்திய குழுவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடினர்.