உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்! லெபனானுக்கு இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
உடன் வெளியேறுங்கள்..
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் "தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள" உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர், குறிப்பாக பௌர்ஜ் எல்-பராஜ்னே மற்றும் ஹதத் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் பெய்ரூட் - டமாஸ்கஸ் சாலையில் லெபனான் மலையை நோக்கி கிழக்கு நோக்கி வெளியேறி விடுங்கள் என அறிவித்துள்ளார்.
ஹரேத் ஹ்ரீக் மற்றும் ஷியா சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் பெய்ரூட்-திரிப்போலி சாலையில் வடக்கே திரிப்போலி நோக்கியும், கிழக்கே லெபனான் மலையை நோக்கியும் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri