கருங்கடலில் முகாமிட்டுள்ள ரஷ்ய போர்க்கப்பல்கள் (VIDEO)
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 8 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
இந்நிலையில்,உக்ரைன் எல்லையை ஒட்டி கருங்கடல் பகுதியில் ரஷ்ய போர்க் கப்பல்கள் முகாமிட்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.
வான்வழித்தாக்குதல்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வரும் நிலையில், உக்ரைன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கருங்கடல் பகுதியில் பியோட்டர் மார்க்னோவ், புரோஜெக்ட்-1171, புரோஜெக்ட்-775 ஆகிய போர் கப்பல்களை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Video from western Crimea showing much of Russia's naval grouping in the Black Sea. I count the Pyotr Morgunov Project 11711, two Project 1171, and 5(?) Project 775 large landing ships.https://t.co/3KXaclFHIc pic.twitter.com/Pa5OBqvFOf
— Rob Lee (@RALee85) March 3, 2022
இந்த போர்க்கப்பல்கள் ஆழம் குறைவான கடற்பகுதிகளிலும் இயக்க வல்லவை என்றும், ஒவ்வொரு போர்க்கப்பலிலும், தலா 500 வீரர்கள், 4 தாக்குதல் ஹெலிகாப்டர்களை ஏற்றிச்செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்....
உக்ரைன் மக்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்: உக்ரைன் பெண்களின் நெகிழ்ச்சி செயல்
ரஷ்யாவுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் உக்ரைன் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ரஷ்யாவுடன் தொடர்புடைய நிறுவனங்களின் வர்த்தகம் நிறுத்தம்! லண்டன் பங்குச் சந்தை அதிரடி