உக்ரைன் மக்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்: உக்ரைன் பெண்களின் நெகிழ்ச்சி செயல்
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 8 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், தங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர் ஒருவருக்கு தேநீரும் உணவும் வழங்கி, அவர் முதுகில் தட்டி ஆறுதல் சொல்லும் உக்ரைன் தாய்மார்களைக் காட்டும் காணொளி ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
ரஷ்ய வீரர் ஒருவர் தனது ஆயுதங்களை எறிந்துவிட்டு, உக்ரைன் பொதுமக்களிடம் சரணடைந்துள்ளதுடன், அவருக்கு அந்த தாய்மார்கள் தேநீரும் உணவும் கொடுத்து தனது தாயுடன் பேசுவதற்கு தங்கள் தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தி கொடுத்து உதவியுள்ளனர்.
குறித்த ரஷ்ய வீரர், தன் தாயைக் கண்டதும் கதறியழுவதை பார்த்து அவரது முதுகைத் தட்டிக்கொடுத்து உக்ரைன் தாய்மார்கள் ஆறுதல் கூறியுள்ளதுடன்,இளைஞனின் தாயாருக்கும் ஆறுதல் கூறியுள்ளனர்.
குறித்த காணொளி ரஷ்யாவிலும் உக்ரைனிலும் வைரலாக, தங்கள் நாட்டை ஊடுருவுவதற்காக வந்த இராணுவ வீரர் மீது உக்ரைனியர்கள் காட்டும் இரக்கத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்....
ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது
ரஷ்யாவுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் உக்ரைன் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ரஷ்யாவுடன் தொடர்புடைய நிறுவனங்களின் வர்த்தகம் நிறுத்தம்! லண்டன் பங்குச் சந்தை அதிரடி
உக்ரைன் ரஷ்ய மோதல்! நுாற்றாண்டு காணாத அகதி நெருக்கடி - ஐ.நா எச்சரிக்கை