ரஷ்யாவுடன் தொடர்புடைய நிறுவனங்களின் வர்த்தகம் நிறுத்தம்! லண்டன் பங்குச் சந்தை அதிரடி
உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யாவுடன் தொடர்புடைய 28 நிறுவனங்களுக்கான வர்த்தகத்தை லண்டன் பங்குச் சந்தை (LSE) நிறுத்தி வைத்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை உன்னிப்பாக கண்காணித்து" வருவதாகவும், தடைகள் தொடர்பாக கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதாக லண்டன் பங்குச் சந்தை (LSE) அறிவித்துள்ளது.
இன்று காலை வெளியிட்ட அறிவிப்பின்படி, பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் அரசுக்கு சொந்தமான oil titan Gazprom மற்றும் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான Sberbank ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுகோயில், நோரில்ஸ்க் நிக்கல், பாலியஸ் மற்றும் ரோஸ்நேப்ட் உட்பட ரஷ்யாவின் மிகப் பெரிய சுரங்க நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் உலோக நிறுவனங்களின் வர்த்தகம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
லண்டன் பங்குச் சந்தை 28 ரஷ்ய பட்டியலிடப்பட்ட பத்திரங்களின் வர்த்தகத்தை நிறுத்தி வைத்துள்ளது" என்று தலைமை நிர்வாகி டேவிட் ஸ்விம்மர் தெரிவித்துள்ளார்.