வெளிநாட்டு விசா நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கையில் நிகழ்நிலை(online) மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகள் தொடர்பாக அனுமதி வழங்கிய அமைச்சரவை முடிவை இடைநிறுத்தி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த இடைக்கால உத்தரவானது நேற்று(02.08.2024) பிறப்பிக்கப்பட்டு்ள்ளது.
நடைமுறை மீறல்கள்
இந்நிலையில் மனுக்கள் மீது இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்குமெனவும், அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இருந்த தற்போதைய நிலையை தொடருமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களைக் கொள்வனவு செய்வதில் அதிகாரிகளால் நடைமுறை மீறல்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு அமைய உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவதற்கான பயண அங்கீகார முறை (ETA) ஆதரவிற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, அமைச்சரவை மற்றும் பலர் பிரதிவாதிகளாக மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொது நிதிக் குழுவின் உறுப்பினர்கள்
நாடாளுமன்றத்தின் பொது நிதிக் குழுவின் (COPF) உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன் பி.சி., ரவூப் ஹக்கீம் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் நேரில் முன்னிலையாகி வாய்மூலம் சமர்பித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்கவுக்காக உபுல் ஜயசூரிய மற்றும் சித்தார சம்பத் விஜேவர்தன முன்னிலையாகியிருந்தனர்.
கலாநிதி ரொஹான் பெத்தியகொட மற்றும் சந்திரா ஜயரத்னவுக்காக ருக்ஷான் சேனாதீரவுடன் சஞ்சீவ ஜயவர்தன, பி.சி. சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் ஞானராஜ் இலங்கை உள்வரும் சுற்றுலா செயற்பாட்டாளர்களின் சங்கம் மற்றும் பல மனுதாரர்கள் சார்பாக முன்னிலையானார்.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சேனானி தயாரத்ன முன்னிலையானார்.
விஷ்வ டி லிவேரா தென்னகோனுடன் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, சட்டத்தரணி எஸ்.எம். திஸாநாயக்க. சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |