கைதிகளை நேரில் சென்று வரவேற்ற புடின்
பனிப்போருக்குப் பிறகு ரஷ்யாவிற்கும் (Russia) மேற்கு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய கைதிகள் இடமாற்றத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ரஷ்ய கைதிகளை அந்நாட்டு ஜனாிபதி விளாடிமிர் புடின் (Vladmir Putin) நேரில் சென்று நாட்டிற்கு வரவேற்றுள்ளார்.
விமான நிலையத்திற்கு சென்ற புடின் குறித்த கைதிகளிடம், "நீங்கள் தாய்நாட்டிற்கு திரும்பியதற்கு வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாடு திரும்பிய ரஷ்யர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் மரியாதையும் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களை அணைத்து பூங்கொத்துகளை வழங்கியும் புடின் வரவேற்றுள்ளார்.
கைதி பரிமாற்றம்
குறிப்பாக, ஜார்ஜியாவில் பிறந்த செச்செனிய எதிர்ப்பாளரை படுகொலை செய்ததற்காக ஜெர்மனியில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த எப். எஸ். பி. ஹிட்மேன் வாடிம் கிராசிகோவிற்கு புடினின் விசேட வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, நாட்டிற்கு வரும் எவரையும் அரிதாகவே விமான நிலையத்தில் சென்று வரவேற்கும் புடின், குறித்த கைதிகளை நேரில் சென்று வரவேற்றுள்ளமை இடம்பெற்ற கைதி பரிமாற்றத்தின் ஒரு முக்கிய பகுதியாக பார்க்கப்படுகின்றது.
மேலும், இந்த கைதி பரிமாற்ற நடவடிக்கையின் பின்னணியில் புடின் தான் வெற்றி பெற்றுள்ளதாக பெருமிதம் கொள்வதனையும் அறிய முடிகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |