அதிகரித்துள்ள போர் பதற்றம் : இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ரத்து செய்யும் நிறுவனங்கள்
ஈரானில் ஹமாஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்ற போதும், அந்த நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் ரத்து செய்யத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் Delta மற்றும் United விமான சேவை நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலுக்கான சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்
நேற்றுமுன்தினம் முதல் விமான சேவைகளை ரத்து செய்துள்ள United நிறுவனமானது இதற்கான உரிய நடவடிக்கை பின்னர் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
டெல்டா விமான சேவை நிறுவனம் தெரிவிக்கையில், தங்களின் இணைய பக்கமூடாக Air France மற்றும் EL AL Israel ஆகிய விமானங்களில் இஸ்ரேலுக்கு முன்பதிவு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஒகஸ்ட் 14க்கு முன் டெல்டா நிறுவனத்தில் டெல் அவிவ் அல்லது அங்கிருந்து பயணத்தை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான சேவை நிறுவனங்கள்
இவ்வாறிருக்கையில், Air Canada நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்டோபர் 15ஆம் திகதி வரையில் இஸ்ரேலுக்கான தங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி ரொறன்ரோவில் இருந்து அக்டோபர் 15ஆம் திகதி இஸ்ரேலுக்கு அடுத்த விமானம் புறப்பட உள்ளது.

2023 ஒக்டோபர் 7ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை அடுத்து பல விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு விமான சேவையை ரத்து செய்தது. ஆனால் சில நிறுவனங்கள் பின்னர் சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri