வெளிநாட்டிலிருந்து வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட பணம் மாயம்: பொலிஸார் விசாரணை
வெளிநாட்டில் வசிக்கும் கணவனால் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் மூன்று நிமிடத்திற்குள் மற்றுமொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் உள்ள கணவன் காலி - கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்குக் கடந்த 31 ஆம் திகதி 12 இலட்சம் ரூபா பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், மனைவியின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் கணவரின் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

பொலிஸார் விசாரணை
இதனையடுத்து, வெளிநாட்டில் உள்ள கணவர் இது தொடர்பில் தனது மனைவியிடம் கேட்ட போது, தான் அந்தப பணத்தை வேறொரு வங்கிக்கணக்கிற்கு மாற்றவில்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில், மனைவி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam