லண்டனில் நாமல் ராஜபக்சவின் உரை! ஒக்ஸ்போர்ட் யூனியனின் அதிரடி முடிவு..

Sri Lankan Tamils London Namal Rajapaksa Rajapaksa Family Protest
By Shadhu Shanker Feb 22, 2026 11:59 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொள்ள இருந்த உரை நிகழ்ச்சியை ஒக்ஸ்போர்டு யூனியனும் ரத்து செய்துள்ளது.

தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து இவ்வாறு உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

இதற்கு முன்,கேம்பிரிட்ஜ் யூனியன் நிர்வாகம் நாமல் ராஜபக்ஸவின் திட்டமிடப்பட்ட வருகையை சில நாட்களுக்கு முன் ரத்து செய்திருந்தது. நாமல் ராஜபக்ஸ, இன்று 23ஆம் திகதி ஒக்ஸ்ஃபோர்ட் யூனியனில் உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தார்.

புலம்பெயர் தமிழர்களுக்கு நாமல் அஞ்சி பின்வாங்கமாட்டார்! திஸ்ஸ குட்டியாராச்சி அதிரடி

புலம்பெயர் தமிழர்களுக்கு நாமல் அஞ்சி பின்வாங்கமாட்டார்! திஸ்ஸ குட்டியாராச்சி அதிரடி

ஒக்ஸ்போர்டு யூனியன்

அதேபோன்று கேம்பிரிட்ஜிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இரு நிகழ்ச்சிகளும், பல ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர் அமைப்புகளின் விமர்சனங்களைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன.

லண்டனில் நாமல் ராஜபக்சவின் உரை! ஒக்ஸ்போர்ட் யூனியனின் அதிரடி முடிவு.. | Oxford Union Cancels Namal Rajapaksa Event

சமூக வலைத்தளமொன்றில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில், நாமல் ராஜபக்ஸவை அழைப்பது பொதுமக்கள் பாதுகாப்புப் பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது திட்டமிட்ட குண்டுவீச்சை புறக்கணிப்பதாகும், போர் ஆயுதமாக அமைப்புசார்ந்த பாலியல் வன்முறை பயன்படுத்தப்பட்டது.

“பத்தாயிரக்கணக்கானோர் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டனர்” போன்ற குற்றச்சாட்டுகளை உதாசீனப்படுத்துவதாகும் என தமிழ் மாணவர் குழுக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், “தமிழ் நிலங்களின் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் கலாச்சார நினைவுகளின் அழிப்பு” குறித்தும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் லண்டனில் ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்ற நாமல்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் லண்டனில் ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்ற நாமல்

போராட்டம் 

இந்த குற்றச்சாட்டுகள், 26 ஆண்டுகள் நீடித்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தைச் சார்ந்தவை. போர் கால மீறல்களுக்கு பொறுப்பேற்பு மற்றும் நீதிக்காக தமிழ் ஆதரவு அமைப்புகள் சர்வதேச அளவில் தொடர்ந்து போராடி வருகின்றன.

லண்டனில் நாமல் ராஜபக்சவின் உரை! ஒக்ஸ்போர்ட் யூனியனின் அதிரடி முடிவு.. | Oxford Union Cancels Namal Rajapaksa Event

தமிழ் யூத் ஆர்கனைசேஷன் யூகே (TYOUK) வெளியிட்ட அறிக்கையில், நாமல் ராஜபக்ஸ “இனப்படுகொலை அமைப்பின் உறுதியான ஆதரவாளர் எனக் குறிப்பிடப்பட்டார்.

அவரை அழைப்பது “நீதி மற்றும் பொறுப்பேற்பை தொடர்ந்து மறுக்கும் ஆட்சிக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிப்பதாகும்” என்றும், “தமிழ் உயிர் பிழைத்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேதனையான செய்தி அனுப்புவதாகும்” என்றும் அமைப்பு தெரிவித்தது.

நிகழ்ச்சி ரத்தாகுமுன் TYOUK போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது. அதேபோன்று Oxford Action for Palestine (OA4P) அமைப்பும் போராட்ட அழைப்பு விடுத்திருந்தது.

நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய ஒக்ஸ்ஃபோர்ட் யூனியன் தலைவர் கேத்ரின் யாங், பத்திரிக்கையொன்றுக்கு அளித்த அறிக்கையில், “மாணவர்கள் நேரடியாக கேள்வி கேட்கும் வாய்ப்பை வழங்குவது யூனியனின் அடிப்படை நோக்கமாகும்.

நாமலுக்கு எதிராக பிரித்தானியாவில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்

நாமலுக்கு எதிராக பிரித்தானியாவில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்

 கேம்பிரிட்ஜ் யூனியன்

இந்த விஷயத்தில், சம்பந்தப்பட்ட பல மாணவர்கள் திறந்தவெளியில் கேள்வி கேட்கத் தங்களை பாதுகாப்பாக உணரவில்லை என தெரிவித்தனர். மாற்று வழிகள் பரிசீலிக்கப்பட்டாலும், நேரடி பங்கேற்பு இல்லாதது விவாதத்தின் சாரத்தை பாதிக்கிறது” எனக் கூறினார்.

“முக்கிய தரப்பினர் சமமான நிலைமையில் ஈடுபட முடியாத நிகழ்ச்சி, வலுவான விவாதத்தை உருவாக்காது” என்றும் அவர் குறிப்பிட்டார். கேம்பிரிட்ஜ் யூனியனும், “அவசர மற்றும் தீவிர ஆலோசனைகள்” பிறகு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது எனத் தெரிவித்தது.

லண்டனில் நாமல் ராஜபக்சவின் உரை! ஒக்ஸ்போர்ட் யூனியனின் அதிரடி முடிவு.. | Oxford Union Cancels Namal Rajapaksa Event

“இவ்வேளையில் சமநிலை மற்றும் திறந்த விவாதம் நடத்த இயலாது என நாங்கள் நம்புகிறோம்” என்று அந்தநிறுவனப் பேச்சாளர் கூறினார். மேலும், “எந்த நிகழ்ச்சியும் பேச்சாளர்களின் கருத்துக்களை ஆதரிப்பதாகவோ அல்லது விமர்சனமின்றி மேடை அளிப்பதாகவோ கருதப்படக்கூடாது” என்றும் வலியுறுத்தினார்.

 முதல் முறை அல்ல

இது ராஜபக்ஸ குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்பட்ட அழைப்பை ஓக்ஸ்ஃபோர்ட் யூனியன் ரத்து செய்த முதல் முறை அல்ல.

லண்டனில் நாமல் ராஜபக்சவின் உரை! ஒக்ஸ்போர்ட் யூனியனின் அதிரடி முடிவு.. | Oxford Union Cancels Namal Rajapaksa Event

2010ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸக்கு வழங்கப்பட்ட அழைப்பும், எதிர்பார்க்கப்பட்ட பெரிய அளவிலான போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகளைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

அப்போது, இந்த முடிவு இலங்கை அதிகாரிகள் மற்றும் மாணவர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US