பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசியக் கொடி நாள் நிகழ்வுகள்
‘நமது கொடி, நமது அடையாளம், நமது உரிமை’ எனும் தொனிப்பொருளில் தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வுகள் பிரித்தானியாவின் லண்டன் மற்றும் கிளாஸ்கோ நகரங்களில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.
அஞ்சலி செலுத்தி
இதன்படி, ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள பால்கிரேஹில் சமூக மண்டபத்திலும், இதனைத் தொடர்ந்து, லண்டன் டிராஃபல்கர் சதுக்கத்திலும் தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வு நடைபெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் அன்ரன் நோபேர்ட் மற்றும் அமைச்சர் மணிவண்ணன் பத்மநாபன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடந்த குறித்த நிகழ்வில் பெருந்திரளான தமிழின செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் கொடிகளையும் ஏந்தி இருந்தனர்.
