இலங்கைக்கு இரண்டு வரலாற்று பீரங்கிகளை மீள வழங்கும் நெதர்லாந்து
18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு பழமையான பீரங்கிகளை மீண்டும் இலங்கையிடம் ஒப்படைக்க நெதர்லாந்து தீர்மானித்துள்ளது.
அம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ்மியூசியம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தப் பீரங்கிகள், இலங்கையின் பாரம்பரியமான “மகா துப்பாக்கிகள்” என அடையாளம் காணப்பட்டுள்ளன.
வரலாற்று பீரங்கி
1765ஆம் ஆண்டு ஒல்லாந்தர் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் கண்டி இராச்சியத்திற்கும் இடையே இடம்பெற்ற போரின்போது இவை கைப்பற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதில் ஒரு பீரங்கியில் கண்டி மன்னருடன் தொடர்புடைய கல்வெட்டும் காணப்படுகிறது. 2023ஆம் ஆண்டிலும் இதேபோன்ற இரண்டு பீரங்கிகளை நெதர்லாந்து இலங்கைக்குத் திருப்பி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.