இலங்கையில் எரிபொருளுக்கான QR பயன்பாடு முடிவுக்கு வருவது தொடர்பில் அரசின் அறிவிப்பு
மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை QR குறியீடு முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த முறை நீண்ட காலத்திற்கு மாறாது என்றாலும், QR குறியீடு முறையின்படி வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு மாறக்கூடும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒதுக்கீட்டின்படி வழங்கப்படும் லிட்டர் எரிபொருளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேவையான எரிபொருள்
நாட்டில் அடுத்த ஏப்ரல் இறுதி வரை தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எரிபொருள் பதுக்கல், தேவையற்ற கொள்முதல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துவதைத் தடுக்க நேற்று முதல் QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
QR குறியீடு முறையின்படி எரிபொருளை வழங்குவதன் மூலம் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri