மலையகத்தில் தொடர் கனமழை - நுவரெலியாவில் 06 குடும்பங்கள் இடப்பெயர்வு
சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(02.08.2026) இரவு முதல் பெய்து வரும் கனமழைக்காரணமாக பல வீடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நுவரெலியாவில் தொடர் மலை
இதற்கமைய, நுவரெலியா - சென் அன்றுஸ் பகுதியில் உள்ள 06 வீடுகளில் புகுந்த வெள்ள நீர் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு நுவரெலியா பம்பரகலையில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் பலவற்றின் நீர்மட்டம் துரிதமாக உயர்வடைந்துள்ளதால் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.


அடுத்த 24 மணி நேரத்திற்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்! களனி கங்கையை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை