இந்தோனேசிய படகு விபத்து - காணாமல் போன 28 பேரை மீட்க தீவிர தேடுதல் நடவடிக்கை
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகில் தீ விபத்து ஏற்பட்டதில், ஐவர் உயிரிழந்ததுடன், 238பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 28 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுராபாயா நகரிலிருந்து சுலாவேசியில் உள்ள மகசார் நகருக்கு 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த 'கே.எம். முதியாரா செந்தோசா' என்ற படகில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றியது.
60 பேருக்கு சர்ச்சைக்குரிய விசா வழங்கியது யார்....! பின்னணியில் செயற்பட்ட மறைகரம்! ஆபத்தாக மாறும் இலங்கை
விபத்திற்கான காரணம்
இதில் இதுவரை 238 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 28 பேரை இன்னும் காணவில்லை.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் இந்தோனேசிய கடற்படை, பொலிஸ் மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக 7 படகுகள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் மூலம் 10 மைல் சுற்றளவில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் சுராபாயாவில் உள்ள துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், தேடுதல் பணி அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
17,000 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகுப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அங்கு இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.