கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும்

Sri Lanka Politician Sri Lankan Peoples Protest
By T.thibaharan Jul 30, 2026 08:36 AM GMT
Report

கறுப்பு ஜூலை என்பது 1983 ஜூலை 24 தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்கள் 3000 பேர் வரை படுகொலை செய்ததும், தமிழர்களின் சொத்துகளை அழித்தும், கைப்பற்றியும், சூரையாடியும், கொள்ளைடித்தும், தமிழ்ப் பெண்களை கற்பழித்தும், தமிழர் வீடுகள் வியாபால நிறுவனங்களை தீவைத்து எரித்தும் சிங்கள இனவெறியர்கள் ஆடிய ஊழித்தாண்டவத்தை ஈழத்தமிழர்கள் அதனை ஒரு துன்பவியல் நிகழ்வாக கடந்துவிட முடியாது.

அது ஈழத்தமிழர்களது இருப்போடும், வாழ்வோடும், வரலாற்றோடும் பிண்ணிப் பிணைந்த ஒன்றாகும். அந்த வலியும், வேதனையும் தலைமுறை தலைமுறையாக காவிக் கடத்தப்படவேண்டியதொன்று.

கஞ்சிபாணி இம்ரானைத் தேடி விசேட பொலிஸ் குழு இந்தோனேசிய பயணம்

கஞ்சிபாணி இம்ரானைத் தேடி விசேட பொலிஸ் குழு இந்தோனேசிய பயணம்

1983 ஜூலையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு என்பது சடுதியாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல.

அது நீண்ட திட்டமிடலோடும், இன விரோதத்தோடும், தமிழர்களின் பொருளாதாரத்தை கொழும்பில் இல்லாது ஒழிக்கவும், பொருளாதார இலக்குகளை சிங்களவர்கள் கைப்பற்றுவதற்குமான ஒரு நீண்டகால தொடர் இனவிரோத செயல்முறையின் ஒட்டுமொத்த திரட்சியின் வடிவம் தான் ஜூலை இனப்படுகொலை.

ஆனால் யாழ் திருநெல்வேலியில் ஜூலை 23ஆம் திகதி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள படையினர் கொல்லப்பட்டமை என்பது அந்த இனப்படுகொலையை ஆரம்பிப்பதற்கான உடனடி காரணமாக அமைந்துவிட்டது.

கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் | Black July 1983 And Unresolved Tamil Problem

 ஜூலை படுகொலை

சிங்களவர்களால் 1983 ஜூலை இனவழிப்பின் ஆரம்பத்திற்கு முன்னரே மே மாதம் பெரதேனியா பல்கலைக்கழக பதிவாளராக(1976) இருந்த விமல் சுந்தரவின் ஆதரவு அணி மாணவர்களான துல்சி விக்ரமசிங்க மற்றும் டொக் கமகே ஆகியோரின் தலைமையிலான குழுவினால் பெரதேனியா பல்கலைக்கழக அருணாசலம் மண்டபத்தில் வைத்துத் இனத்துவேசம் பேசியவாறு தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டனர். 

இதனையடுத்து, 1983 ஜூலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கபினற் மினிஸ்டர்கள் சிலர் கிளாஸ்களை உடைத்து தமிழின விரேதம் பேசி சத்திமிட்டுவிட்டு கலகம் விளைவித்தார்கள்.

கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் | Black July 1983 And Unresolved Tamil Problem

அதன்பின்னர் அதாவது 83 கலவரம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த பெஸ்ரஸ் பெரேரா தன்னுடைய தொண்டர்களுக்கு பிறவுன் கொட்டேல் கடற்கரையில் வைத்து “let them wait a few weeks , they will learn a good lesson‘‘ என்று சொன்னார். 1983 ஜூலை 11 இல் ஜே.ஆர் ஜயவர்த்தனா ‘‘நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.

இப்போது அவர்களைப்பற்றி எம்மால் சிந்திக்க முடியாது. அவர்கள் உயிர்களைப்பற்றியோ, அவர்கள் எங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றியோ சிந்திக்க முடியாது “என்கிறார், இது தமிழர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற வக்கிரம் ஜனாதிபதி மனதில் குடிகொண்டிருப்பதை காட்டுகிறது.

என்னை சிறையில் அடைப்பது சுலபமானதல்ல! வகுக்கப்பட்டுள்ள அரசியல் திட்டங்கள்: சவால் விடும் நாமல்

என்னை சிறையில் அடைப்பது சுலபமானதல்ல! வகுக்கப்பட்டுள்ள அரசியல் திட்டங்கள்: சவால் விடும் நாமல்

இதேவேளை பின்நாளில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துளத்முதலியிடம் ஒக்பேட் பல்கலைக்கழக டேவிட் செல்போர் என்ற அவரது நண்பன் ‘‘இனப்பிரச்சனைக்கு எத்தகைள தீர்வை காணப்போகிறீர்கள்“ என்று கேட்டதற்கு, “ mash The Heads of the Tamils‘‘ என்று சொன்னார். அது இனக்குரோதத்தின் உச்சத்தின் வெளிப்பாடு, திருநெல்வேலியில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினருடைய சடலங்களும் பொரளை மயாணத்தில் எரிக்கப்பட்டது.

ஓகனேசன்ஸ் திட்டம்

24 ஆம் திகதி மதியம் 2மணிக்கு கொழும்பு வீதிகள் எங்கும் படுகொலைகள் நடந்தன. சிங்களவர்கள் சிலர் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் போது அந்த அந்த பிரதேசத்தின் வாக்காளர் பட்டியலினை கையில் வைத்துக்கொண்டே ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தாக்கினர்.

தென்னிலங்கையில் தமிழர்கள் பெருமளவு கொல்லப்பட்டு பேரழிவை சந்தித்துக் கொண்டிருப்பதை ரசித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி, ஜூலை 27ஆம் திகதி வானொலி ஊடாக தனது உரையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு எந்தவிதமான அனுதாபமோ வருத்தமோ தெரிவிக்கவில்லை.

கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் | Black July 1983 And Unresolved Tamil Problem

அதேநேரம் அமைச்சர் அனந்த திஸ்ஸ டி அல்விஸ் த காடியன் ஊடகங்களுக்கு 28ஆம் திகதி யூலை கொடுத்த பேட்டியில், சில ஓகனேசன்ஸ் திட்டம் செய்திருந்தாகவும், தாம் அது தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இது ஒரு Hit and Run Operation என்றும் கூறினார். இங்கு படுகொலைகளின் பின் எந்தவோரு அரசியல் கட்சியோ, தொண்டு நிறுவனமோ, பத்திரிகைகளோ ஒரு வருத்தத்தை தானும் தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்டவர்களுடன் எப்படி தமிழர்கள் சமரசம் செய்து இணைந்து வாழ முடியும்? 

ஊடகவியலாளர்களுக்கு சொன்ன தகவல்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நடந்த போது 28 ஆம் திகதி இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தனது வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவைக் கொழும்புக்கு அனுப்பி வைத்து எச்சரித்தார்.

ஆனாலும் ஜூலை 31ஆம் திகதி தான் இனவழிப்பு வெறியாட்டம் நிறுத்தப்பட்டது. சிங்களவர்கள் சிலர் வீதியில் சென்று கொண்டிருந்த மக்களை மறித்து, “ நீ சிங்களவனா?” எனக் கேட்டார்கள்.

கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் | Black July 1983 And Unresolved Tamil Problem

அப்போது அவர் ஆம் என்றால் அவர் சிங்களவன் என்பதற்கான அடையாளத்தை காட்டவேண்டும் இதுஒரு புறம் புத்தரினுடைய பாட்டினை பாடிக்காட்ட வேண்டும். அப்போது தான் விட்டார்களாம். இதன்போது ஐலண்ட் பத்திரிகை ஊடகவியலாளர் அமிர்த அபேசேகர அப்பகுதியால் செல்லும் போது அவரிடமும் கேட்கப்பட்டது.

அவர் திருப்பி அந்த சிங்கள தலைவனைக் கேட்டாராம், “ நீ சொல்லு எண்டு அவரால் சொல்ல முடியவில்லை..” என்பதையும் ஐலண்ட் பத்திரிகையில் பதிவு செய்திருந்தார். கொழும்பில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில் மத்தியூ தலைமை தாங்கியிருந்தார்.

அதற்காக ஜாதிக சேவக சங்கமய (JSS) என்கின்ற தொழிலாளர் சங்கத்திற்கு இனவாதத்தை தூண்டி அவர்களைக் கொண்டே வெள்ளவத்தை பகுதியில வீடுகளை தீக்கிரையாக்கப்பட்டது. கொழும்புப் படுகொலைகளை சிறில் மத்தியூதான் தலைமை தாங்கினார் என India Today of 31st August 1983, தெரிவித்திருந்தது. 

வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஆபத்தான பொருள்..! பொலிஸ் பரிசோதகர் அதிரடியாக கைது

வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஆபத்தான பொருள்..! பொலிஸ் பரிசோதகர் அதிரடியாக கைது

442 கடைகள் அழிப்பு

அடுத்து ஐக்கிய தேசியக்கட்சியின் தெகிவளை கல்கிசை மாநகராட்சி கவுன்சிலர் தலைமையிலான கும்பல் ஒன்று மவுண்லவேனியா, கல்கிசை, புறக்கோட்டைப் பகுதிகளில் 442 கடைகளை எரித்து அழித்திருந்தன. தளபதி அலோசியஸ் முதலி மகனுடன் ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்கள் இருவரும் சேர்ந்து பொரளை பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் சீருடைய அணியாத இராணுவம் பயன்படுத்தப்பட்டது.

அத்தோடு, இலங்கை போக்குவரத்து வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்து அமைச்சராக எச் முகம்மட் இருந்தார். நுவரேலியாவில காமினி திசநாயக்கா பற்றிக் சறம் அணிந்தவாறு சிங்களவர்கள் கூட்டத்தை வழிநடத்திப்போய் “தமிழனையும் அவன் கடைகளையும் எரியுங்கள்“ என்று கத்தியவாறு காடையர்களை வழிநடத்தினார்.

இதனை பியதாச தனது நுாலின் 81 -89 வரையான பக்கங்களில் குறிப்பிடுகிறார். (L.Piyadasa , Srilanka: The Holocaust and After , 1984) இந்த பியதாச தான் 1983 கலவரத்தைப்பற்றி விரிவாக எழுதினார்.

கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் | Black July 1983 And Unresolved Tamil Problem

இந்தப்புத்தகம் எழுதியதற்காக அவருடைய கண்டி வீடு அடித்துநொருக்கப்படுகிறது. இந்த கொலைகள் ஒருபுறம் இடம்பெற்றிருக்கும் போது இந்திராகாந்தி இராஜசபாவில் its genocide என்று கூறினார்.

அத்துடன் P.V.நரசிமராவை கொழும்புக்கு அவசரமாக அனுப்பினார். நரசிமராவ் ஜே.ஆர் இடம் நீங்கள் கட்டுபடுத்துகிறீர்களா அல்லது நாங்கள் படையை அனுப்பி கட்டுப்படுத்தவா என்று கேட்டதன் பின் ஜே.ஆர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

அதே போன்று, “எமெஜென்சி 58” என்னும் புத்தகத்தை எழுதிய ரார்சி விற்றாச்சி(Tarzie Vittachi)என்கின்ற தினமும் வெளியாகும் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.

இவர், தனது புத்தகப்பதிவில் 1958 இல் ஹிங்குராங்கொடவில் கரும்புத் தோட்ட அரசவிடுதியில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்து கொலை செய்தனர்.

இரத்தம் தோய்ந்த படி கிடக்க அதனைச் சுற்றி மேளமடித்து பாட்டுப்பாடி மகிழ்ந்தனர். இதனைப்பார்த்த பெண் தன் 2பிள்ளைக்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.

பேருந்து நிலையத்தில் ஆடைகள் கலைக்கப்பட்ட தமிழர்

ஜேர்மனியில் ஹிட்லர் செய்த படுகொலைக்காக இதுவரை நாசிகளின் அரசியல் கட்சிகள் எதுவும் உரிமை கோரிவில்லை, மன்னிப்பு கேட்கவில்லை. அந்த நாளில் ஒஸ்ரிக் முகாமில் அதன் பொறுப்பதிகாரியாக இருந்த ஒஸ்கார் என்ற 94 வயது நிரம்பிய சிறைப்பொறுப்பதிகாரி, கடந்த 2015ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டு 4வருட சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜேர்மனிய அரசுக்கு இந்த தகவல்களை வழங்கியவர்கள் இஸ்ரேலியர்கள்.

அந்தளவிற்கு யூதர்களிடம் தகவல் ஆய்வு மையம் இயங்கிக்கொண்டிக்கிறது. ஆனால் ஈழத்தமிழரிடம் அப்படி எதுவும் இல்லை. 1983 ஜூலை கொழும்பில் நடைபெற்ற படுகொலையை புரட்சி கொம்னிஸ்ட் கழகம் சார்பில் சிங்களத்தில் கம்கறுமாவத்தை என்றும் தமிழில் தொழிலாளர் பாதை என்ற பத்திரிகையின் ஒளிப்படப்பிடிப்பாளராக இருந்த சந்திரகுப்த அமரசிங்க என்பவர் பொரளைப்பகுதியூடாக குடிபோதையில் வரும்போது பொரளை பேருந்து நிலையத்தில் தமிழர் ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்கிவிட்டு மேளமடித்து நடனமாடினர்.

கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் | Black July 1983 And Unresolved Tamil Problem

தமிழ் நபர் தலையிலை கை வைத்துக்கொண்டிருக்கும் போது தனது புகைப்படக்கருவியினால் மொத்தம் 14 புகைப்படங்களை எடுத்திருந்தார்.

இவை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஊடாக கப்டன் பண்டிதருக்கு வழங்கப்பட்டது. அந்த புகைப்படங்கள் தான் பேபி சுப்பிரமணியம் என்பவரால் கடந்த 1984ல் தமிழகத்தில் ஒரு கண்காட்சிக்காக வெளியிடப்பட்டது. அவைதான் இன்றுவரையான யூலை ஆதாரமாகவுள்ளது.

இனப்படுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்வதற்கும், தமக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கும், அதனுடாக தாம் இழந்து போன இறைமையை மீட்டெடுப்பதற்குமான தொடர் போராட்டத்தில் தமது இழப்புக்களையும், தமக்கு ஏற்பட்ட அவலங்களையும் நினைவு கூர்வதும் அதன் மூலமாக ஒரு கூட்டு மனஉணர்வுடன் ஐக்கியப்படவும், ஒற்றுமைப்படுவதற்குமான இடமாக நினைவுச் சின்னங்களும், நினைவு மண்டபங்களும் பேருதவி புரியும்.

அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வலிகளை, மனக்காயங்களை, உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஜூலை இனப்படுகொலையை நினைவு கூறும் நினைவு சின்னங்கள் வரலாற்று உணர்வோடு அமைக்கப்பட வேண்டியது அவசியமானது. அத்தகைய நினைவுச் சின்னங்கள்தான் எதிர்காலத்தில் எமது சந்ததிக்கு வழிகாட்டியாக அமையும். 

ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் - பல தகவல்கள் அம்பலம்

ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் - பல தகவல்கள் அம்பலம்


மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US