உலகின் கவனத்தை ஈர்க்கும் ஹோர்முஸ் – ஈரானின் அதிரடி நிலைப்பாடு
ஈரான் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பான நிபுணரும், முன்னாள் அமெரிக்க இராஜதந்திரியுமான அலன் ஐர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நிறுவகத்தின் உறுப்பினரான அலன் ஐர், அல் ஜசீராவிடம் கருத்து தெரிவிக்கையில், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் தனது முக்கிய மூலோபாய தடுப்பு நடவடிக்கையாகக் கருதத் தொடங்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்குதல்களைத் தடுப்பதே ஈரான் தலைமையின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “அதைச் செய்வதற்கான ஒரே வழியாகவே நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் பார்க்கிறது.
எனவே, பேச்சுவார்த்தையில் விட்டுக்கொடுக்கக்கூடிய ஒரு விடயமாக அதை ஈரான் கருதாது” என அலன் ஐர் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த விரும்பினால், அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் குறுகிய காலத்திலாவது ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஒரு நடைமுறை நிலையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இராஜதந்திர நடவடிக்கைகள் தற்போது வாஷிங்டனில் இருந்து விலகி வளைகுடா நாடுகள் மற்றும் ஈராக்கை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் அலன் ஐர் தெரிவித்துள்ளார்.
தேவையான அளவிலான இராஜதந்திர நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அமெரிக்கா “விருப்பமும் திறனும் அற்ற நிலையில் உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! 21 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - அம்பலமான ஆதாரங்கள்