100 ஜனாதிபதிகள் மாறினாலும் நீதி மாறப்போவதில்லையா.. மட்டக்களப்பில் வெடித்தது மக்கள் போராட்டம்
கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் இருப்பையும் பாதிப்பதாக தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
மேய்ச்சல் தரை என்பது வெறுமனே கால்நடை வளர்ப்புக்கான பிரதேசம் மாத்திரமன்றி, தமிழ் மக்களின் நில உரிமை மற்றும் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினையாகும்.
மேலும், குறித்த மேய்ச்சல் தரையை மீட்டெடுப்பதற்காகவும், அங்கு தொடர்ச்சியாக கால்நடை வளர்ப்பை மேற்கொள்வதற்காகவும் அப்பகுதி மக்களும் சமூக அமைப்புகளும் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, மேய்ச்சல் தரை விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி, குறித்த பகுதியை விடுவிக்குமாறு கோரி மக்கள் இன்று மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் கூடியுள்ளோம்.
எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்திப்பதற்கு மாவட்டச் செயலாளர் தயக்கம் காட்டுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வை வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
அத்துடன், நாட்டில் அனைத்து மக்களுக்கும் சமமான நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்படும் நிலையில், தமிழ் மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் நீதியை நடைமுறைப்படுத்துவதில் வேறுபாடுகள் காணப்படுவதாகவும் அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
இறுதியாக, தமிழ் மக்களின் உரிமைகள், நில விடுதலை மற்றும் இனத்தின் மீட்புக்காக அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ச்சியாகப் போராட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan