அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் 6.8% வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஒக்டோபர் மாத இறுதி வரையிலான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் 6.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உத்தியோகபூர்வ கையிருப்பு, சீனா மக்கள் வங்கியுடனான வெளிநாட்டு செலாவணி பரிமாற்ற வசதி உட்பட, கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு புணியாளர்களின் பணமனுப்பல் 734 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

இது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 5.6 சதவீத வளர்ச்சியாகும்.
நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் கிடைத்துள்ள மொத்த வெளிநாட்டு பணமனுப்பல் 6.9 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18.1 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri